பேரறிவாளனை தவிர ஏனையவர்களின் வாக்குமூலம் திருத்தப்படவில்லை. வழக்கை மீண்டும் விசாரிக்க தேவையில்லை!- ஞானதேசிகன்

Gnanadesikanஜெயின்,வர்மா குழு அறிக்கைபடி ராஜீவ் கொலை வழக்கை மீண்டும் விசாரணை நடத்தும் எண்ணம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் அவருடன் கொல்லப்பட்ட 15 தமிழர்களுக்கு நீதி கேட்டு சென்னையில்ää இந்திய காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி எதிரே நடந்த வரும் இந்த போராட்டத்தில்; காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஞானதேசிகன் பிற குற்றங்களைபோல் ராஜீவ் காந்தி கொலை குற்றத்தை எடுத்துக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

கொலையாளிகள் 3 பேரையும் விடுதலை செய்யக்கோருபவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள்.

ஜெயின், வர்மா குழு அறிக்கைபடி ராஜீவ் கொலை வழக்கை மீண்டும் விசாரணை நடத்தும் எண்ணம் இல்லை.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பேரறிவாளனின் வாக்குமூலமே திருத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரி கூறியுள்ளார்.

எனினும் மற்றவர்களின் வாக்குமூலங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. என்றும் ஞானதேசிகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

TAGS: