நளினி உள்பட 4 பேரும் விடுதலையாவதில் சட்ட சி்க்கல் எதுவும் எழவில்லை, அதனால், தமிழக அரசின் அறிவிப்பின்படி ஓரிரு தினங்களில் அவர்கள் விடுதலை ஆவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ்,ஜெயக்குமார் ஆகியோர் மூன்று நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதனிடையே, 3 பேரின் விடுதலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 பேரை விடுதலை செய்வதி்ல் நீதிமன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி தடை விதித்தது.
இந்நிலையில், வேலூர் மத்திய சிறைச்சாலை முன்பு இன்று செய்தியாளர்களிடம் பேசிய நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே மத்திய அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டு தடை பெறப்பட்டுள்ளது.
அதனால், தமிழக அரசின் அறிவிப்பின்படி மற்ற 4 பேரும் விடுதலையாவதில் சட்ட சி்க்கல் எதுவும் எழவில்லை.
ஆகவே, முறைப்படி ஓரிரு தினங்களில் அவர்கள் விடுதலை ஆவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
விடியலை நோக்கி…..