லூதியானா: பஞ்சாப் மாநிலம் , குஜராத் மாநிலத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. நான் இந்த நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதை விட இந்த நாட்டின் காவலனாக, சேவகனாக இருக்கவே விரும்பகிறேன். என பஞ்சாபில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
காங்கிரஸ் திட்டம் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டது. பிரகாஷ்சிங் பாதல் போன்ற தலைவர்களிடம் இருந்து நான் அதிகம் கற்றுள்ளேன். நான் பிரதமரானால் இந்த நாட்டை காக்கும் சேவகனாக இருப்பேன். உணவு தானியங்கள் வீணாவது தடுக்கப்பட வேண்டும். அனைத்து ஊழல்களும், காங்கிரஸ் ஆட்சியில் தான் நடந்தது. ஆனாலும் எதிர்கட்சிகளை காங்., குற்றம்சாட்டி வருகிறது. காங்கிரஸ் ஒரே குடும்பத்திற்காக ஆட்சி நடத்தப நினைக்கிறது. ஆனால் நாங்கள் இந்த நாட்டை காப்பாற்ற நினைக்கிறோம்.
ஏ.பி.சி.டி., காங்., அயைாளம்: ஏ.பி.சி.டி., என்பது காங்கிரசின் ஊழல் அடையாளமாக உள்ளது. ஏ – ஆதார்ஷ் ஊழல், பி- போபர்ஸ் ஊழல், சி- கோல் (நிலக்கரி ஊழல்) . காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்றேதான். நாட்டில் வளர்ச்சி பொருளதாரம் என்பது விவசாயம், உற்பத்தி, மற்றும் சுற்றுலா ஆகியனவற்றை மையமாக கொண்டு விளங்க வேண்டும், லாலா லஜபதிராய், சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரை காங்., மறந்து விட்டது.
நாட்டின் 3 தூண்கள் : குஜராத்தைப் பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். ஒவ்வொரு இந்தியனுக்கும் குஜராத்தில் வந்து வசிப்பதற்கு உரிமை உண்டு. பா.ஜ., கூட்டணி வலியுறுத்தும் ஒற்றுமையை காங்கிரசால் ஏதும் செய்ய முடியாது. அகாலிதள்-பா.ஜ., கூட்டணியே இந்து-சீக்கிய ஒற்றுமைக்கு உதாரணம். பா.ஜ., – அகாலி தள கூட்டணி காங்.,க்கு பிரச்னையாக உள்ளது. அதனால் அவற்றை பிரிக்க அரசியல் விளையாட்டு நடத்துகிறது; காங்., அதன் தோல்வியை வடிவமைக்கிறது. விவசாயம், உற்பத்தி, பொதுப் பணித்துறை நாட்டின் 3 தூண்கள். இதில் அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நான் இந்தியாவின் கருவூலத்திற்கு காவலாளியாக இருந்து வழிநடத்துவேன். அதனை நான் யார் கையிலும் கொடுக்க மாட்டேன். நான் பிரதமராக விரும்பவில்லை; காவலனாக இருக்க நினைக்கிறேன் . பஞ்சாப் தலைப்பாகைக்கு நான் மதிப்பளிக்கிறேன்.
நமது நாட்டிற்கு காவலாளியாக இருந்து பாதுகாப்பு கண்காணிக்க நான் தயாராக இருக்கிறேன். உணவு தானியங்களை உற்பத்தி செய்வது மட்டுமின்றி, அதை உரிய முறையில் பாதுகாக்கவும் வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு பஞ்சாப் உந்து சக்தியாக இருக்கும் என நம்புகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் நாட்டின் வளர்ச்சியை ஏற்படுத்தும் கூட்டணியாக இருக்கும். ஒவ்வொரு ஏக்கரிலும் எப்படி உற்பத்தியை பெருக்குவது என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். தொழில்நுட்பம் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம். இந்திய உணவுக்கழகம், உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட வேண்டும். உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, மதுபான நிறுவனங்களை தூர விரட்ட வேண்டும். பார்லி.,யில் நடைபெற்ற மிளகுத்தூள் வீச்சு, காங்கிரசால் ஏற்படுத்தப்பட்ட துயர சம்பவம். காங்கிரஸ் முதலில் மக்கள் கண்களில் மண்ணை போட்டது. தற்போது புதிய டிரண்டை கண்டுபிடித்து உங்கள் கண்ணில் மிளகு பொடியை தூவுகிறது.
காங்., அறிவித்துள்ள ஒரே ரேங்க், ஒரே பென்சன் முறை பெயரலவிலானது. அதை அமல்படுத்தாது. இந்த முறையை ஏன் இவ்வளவு தாமதமாக காங்., கொண்டு வந்துள்ளது?எல்லைகளை நாம் பாதுகாக்க வேண்டும். எல்லை தாண்டிய போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதை பழக்கங்களில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும் . இவ்வாறு மோடி பேசினார்.