ராஜீவ் காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதையடுத்து முருகன், பேரறிவாளன், சாந்தன் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்தும், சாந்தன், பேரறிவாளன், முருகன் மற்றும் தமிழக அரசுக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியும் வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில் 24.02.2014 திங்கள்கிழமை காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கை பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 4 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுத்தாக்கல் செய்தது.
வரும் பிப்ரவரி 27ஆம் தேதி மத்திய அரசின் மனு மீது விசாரணை நடத்துவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.