புதுடெல்லி, பிப்.25- முன்னாள் டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட பிறகும் டெல்லியிலுள்ள அரசு பங்களாவில் தங்கியிருந்ததற்காக ரூ.3.25 லட்சத்தை வாடகையாக செலுத்துமாறு டெல்லி பொதுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதே போன்று முன்னாள் காங்கிரஸ் மந்திரிகள் கிரண் வாலியா, அரவிந்தர் சிங் லவ்லி, மற்றும் ஹருண் யூசுப் ஆகியோரும் முறையே ரூ.5.8 லட்சம், 6.5 லட்சம் மற்றும் 2.9 லட்சத்தை வாடகையாக செலுத்த உத்தரவி்டப்பட்டுள்ளது.
அரசு விதிகளின்படி முன்னாள் அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த பிறகு 15 நாட்கள் வரை வாடகை ஏதும் செலுத்தாமல் இலவசமாக அரசு பங்களாவில் தங்கலாம். அதன் பிறகு அவர்கள் அங்கு தங்குவதற்கு விரும்பினால் (அதிகபட்சமாக 6 மாதங்கள்) தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி வாடகையை செலுத்த வேண்டும்.
சென்ற மாதத்திற்கு முன்னதாகவே முன்னாள் காங்கிரஸ் மந்திரிகள் கிரண் வாலியா, முன்னாள் டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித் அரசு பங்களாவை காலி செய்து வி்ட்டனர். ஆனால் லவ்லி மற்றும் ஹருண் யூசுப் இன்னும் காலி செய்யாதது குறிப்பிடத்தக்கது.