மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா இன்று வெளி யிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக, ’’இலங்கை உள்நாட்டுப் போரின் போது, இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும்;
இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும்; தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அனைத்திந்திய அதிமுக உறுதி பூண்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

























