கேரளாவில் இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகம் நாளை திறப்பு

srilanka_001தமிழ் நாட்டில் உள்ள உயர்ஸ்தானிகரகத்தை மூடும் முதல் கட்டமாக இலங்கை, கேரளாவில் தமது துணை உயர்ஸ்தானிகரகத்தை நாளை திறக்கவுள்ளது.

கேரளாவின் முதலமைச்சர் ஓமன் சாண்டியால் இது திறந்து வைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கும் – கேரளாவுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்த புதிய துணை உயர்ஸ்தானிகரம் திறக்கப்படுவதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தமிழகத்தில் உள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரத்தை மூடுவதற்கான முதல்கட்டமாக இந்த துணை உயஸ்தானிகரம் திறக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்புகள் ஆதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து அங்குள்ள சிறிலங்கா உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்த நிலையில் அதனை மூடிவிடுவதற்கு முன்னதாக அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும், உள்நாட்டில் எதிர்ப்புகள் வெளியாகியதைத் தொடர்ந்து அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

TAGS: