கச்சதீவை ஏன் இந்தியா மீளக்கோர முடியாது? !– ஜீ.கே.வாசன் கேள்வி

Kachchatheevuஇலங்கையிடம் கையளிக்கப்பட்ட கச்சதீவின் அதிகாரத்தை இந்தியா ஏன் மீண்டும் கோர முடியாது என்று இந்திய கப்பல் துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கச்சதீவை மீளப்பெறுவது தொடர்பில் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பன உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கின்றன.

இது தொடர்பான வழக்கில் முன்னிலையான இந்திய மத்திய அரசாங்கத்தின் சட்டத்தரணி, கச்சதீவு எல்லை பிரிக்கப்பட்டதன் அடிப்படையில் இலங்கைக்கு உரிமையானதாக மாறியதால், அதனை இந்தியாவால் மீளக் கோரமுடியாது என்று தெரிவித்திருந்தார்.

மத்திய அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தொடர்பில் நான்கு வாரங்களில் பதில் வழங்குமாறு உயர் நீதிமன்றம் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு காலஅவகாசம் வழங்கி இருக்கிறது.

இந்த நிலையில் கச்சதீவினை இந்தியா கண்டிப்பாக மீளப்பெற வேண்டும் என்றும், இதன் மூலமே தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் ஜீ.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

TAGS: