இலங்கைத் தமிழர்களுடன் இந்தியா இணைந்திருக்கும்: குர்ஸித்

salmanஇலங்கையின் வடக்கு தமிழர்களின் புனர்வாழ்வு பணிகளில் இந்தியா இணைத்திருக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் இன்று மியன்மாரில் சந்திக்கவுள்ளமை தொடர்பிலேயே குர்ஸித் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அவசியமாகின்றன. இதன்காரணமாகவே இந்தியா அவர்களுக்கு வீடுகள், பாடசாலைகள் மற்றும் நிர்மாணப் பணிகளை செய்துக்கொடுக்கிறது.

இந்தநிலையில் நல்லிணக்கம் தொடர்பிலும் இந்தியா இலங்கையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் 13வது அரசியலமைப்பை உரிய முறையில் செயற்படுத்த இலங்கையை கோரிவருவதாகவும் குர்ஸித் குறிப்பிட்டார்.

தமிழக கட்சிகள் இந்திய பிரதமர், இலங்கை ஜனாதிபதியை சந்திக்கக்கூடாது என்று கோருவது குறித்து கருத்துரைத்துள்ள அவர், இலங்கை தமிழர்களின் நலன் தொடர்பிலேயே மன்மோகன்சிங், மஹிந்த ராஜபக்சவை சந்திப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

TAGS: