ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் மே 17 இயக்கம், சமீபத்தில் சென்னையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டது.
தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிற மே 17 இயக்கத்தின் தலைவரான திருமுருகனிடம் பேசினோம்.
ஐ.நா-வுக்கான உயரதிகாரியாக பணிசெய்த விஜய் நம்பியார், இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பதை நாங்கள் ஏற்கெனவே நிரூபித்திருக்கிறோம். 2009 போரின்போது முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவும் மருந்தும் அனுப்புவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்தியது. இது சர்வதேச மனித உரிமைக் குற்றம் அல்லது, போர்க்குற்றம்.
இதை உலகுக்கு அறிவித்து நடவடிக்கை எடுக்க ஐ,நா-வின் மனிதாபிமான பணிகளுக்கான செயலாளர் ஜான் ஹோல்ம்ஸ் மறுத்தார். இவர் விஜய் நம்பியாருடன் இணைந்து நின்று இலங்கையைக் காத்தார்.
சர்வதேச சுதந்திர விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரம் உள்ள விதி எண் 99-ன் கீழ் உடனடியாக இலங்கை மீது விசாரணை நடவடிக்கையை மேற்கொள்ள ஐ.நா. பரிந்துரை செய்திருந்ததைப் புறக்கணித்து, இலங்கை அரசு தம்மைத் தாமே விசாரிக்கும் என்றார். இதுவே இதுநாள் வரை தமிழர்களுக்கான நீதியை தட்டிப்பறித்து நிற்கிறது.
இவற்றை அம்பலப்படுத்தவும், விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும், இவர்களால் தடுக்கப்பட்டிருக்கும் சர்வதேச விசாரணையை வெளிக்கொணரவும் ஐ.நா. முற்றுகைப் போராட்டத்தினை நடத்துகிறோம்.
ஐ.நா-வின் ஜெனிவா தலைமை அலுவலகம் முன் தீக்குளித்த முருகதாசன் நினைவுநாளில் வருடந்தோறும் உலகெங்கும் நடத்தப்படும் போராடத்தினை, இந்த முறை சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, நியூயார்க், சிட்னி உள்ளிட்ட நகரங்களில் தோழமை அமைப்புடன் இணைந்து நடத்தினோம்” என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிறது. உலக நாடுகளின் மௌனம் இன்னமும் தொடர்கிறதே?
இதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் சீனாவும்தான் பொறுப்பேற்க வேண்டும். இவர்களது பிராந்திய நலனை முன்னிறுத்தியே நீதியைத் தடுத்து வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, இந்தியாவின் தலையீடே தமிழர்களுக்கான நீதியைத் தடுக்கிறது. ஏனெனில், விசாரணைத் தொடங்கும் பட்சத்தில் இந்திய அதிகாரிகளும் இலங்கையுடன் சேர்த்து விசாரிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
மார்ச் மாதத்தில் தொடங்க இருக்கும் ஐ.நா. அமர்விலாவது இலங்கைக்கு ஏதாவது அழுத்தம் ஏற்படுமா?
ஐ.நா-வின் விதிகளைக் கணக்கில் எடுக்காமலும், மனித உரிமை கமிஷனின் பரிந்துரைகளைக் கணக்கில் எடுக்காமலும், மீண்டும் அமெரிக்கா தனது நலனுக்காகவும், இந்தியா தனது விருப்பத்துக்காகவும் தீர்மானங்களை வரையறுத்தால், இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இயலாது. இதுவரை உலக அளவில் இலங்கை அழுத்தத்தினைப் பெறவில்லை. மாறாக, அது தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
ஐ.நா-வின் மனித உரிமை ஆணையர் நவிபிள்ளையின் அறிக்கையின் சில பாகங்கள் கசிந்திருக்கும் நிலையில், அதில் என்ன உள்ளது?
கடந்த வருட அமெரிக்கத் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை எவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதைப்பற்றிய அவரது குறிப்புகளே வெளியாகி இருக்கிறது. இதில் இலங்கை அரசு எழுப்பிய 72 கேள்விகள் / பரிந்துரைகளில் சிலவற்றினை மட்டும் காண முடிந்தது.
அமெரிக்க தீர்மானத்தின்படி, இலங்கை அரசு தனது செயல்பாட்டு முறைகளை மாற்றி, சட்ட திட்டங்களை புதிதாக எழுப்பி, சர்வதேச உதவியுடன் ஜனநாயக நாடாக மாற வேண்டும் என்கிற வழிமுறைகளையும், தமிழர்களுடன் நல்லிணக்கமாகச் சென்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருவரும் வாழ இலங்கை வழிவகை செய்வதற்கான வழிமுறைகளையும் பற்றி பேசியிருக்கிறது.
ஆக மொத்தம் நவி பிள்ளையின் இலங்கைப் பயணமும் அறிக்கையும் ஏமாற்றம்தானா?
நவிபிள்ளை மனித உரிமை ஆணையராக கலந்துகொள்ளும் இறுதி ஐ.நா. அமர்வு இதுதான். ஆகவே, அவர் இலங்கை அரசு மீது போர்க்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும். ஆனால், அவரது இலங்கைப் பயணம் தொடர்பான அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டினை யாரும் என்னிடம் சொல்லவில்லை என்று அவர் சில தமிழர் தரப்பு பிரதிநிதிகளிடம் சொல்லியிருக்கிறார்.
தாங்கள் நடத்திய இனப்படுகொலையைத் தாங்களே விசாரிக்க அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதா? அந்தக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த 2017 வரை கால அவகாசம் கேட்டுள்ளதே இலங்கை?
ஐ.நா-வின் நிபுணர் குழு, ஐ.நா-வின் மனித உரிமை கமிஷன், மனித உரிமை அமைப்புகளான மன்னிப்புச்சபை, மனித உரிமை கண்காணிப்பகம் போன்றவை மற்றும் உலகின் சிறந்த மனித உரிமை கண்காணிப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல் அறிஞர்கள் ஆகியோர் இதை நிராகரித்து இருக்கிறார்கள்.
காலநீட்டிப்பு கேட்பதன் மூலம் வடக்கு கிழக்குப் பகுதியினை முழுமையாக ஆக்கிரமிப்பதும் தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் நிகழும் ஈழவிடுதலை ஆதரவு போராட்டங்களை சோர்வடையச் செய்வதற்குமான உத்திதான் அது.
வட மாகாணத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள். அதனால், மக்களுக்கு ஆதாயம் ஏதும் உண்டா?
1987-ல் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல் தீர்வு இது. புலிகள் மட்டுமல்ல… இந்திய இராணுவத்தின் துணையுடன் அங்கே முதல்வராக இருந்த வரதராசப்பெருமாளே இது தீர்வல்ல என்று புறக்கணித்திருக்கிறார். இதன்மூலம் தமிழர்களுக்கு எந்த குறைந்தபட்ச நன்மையும் வந்துவிடப்போவது இல்லை.
இதனால்தான் நான் பல ஆண்டுகளாக இந்தியா தான் தமிழர்களின் முதல் துரோகி என்பதை குற்றம் சாற்றுகிறேன்.
அதுதான் உண்மை ,இந்திய தமிழர்களின் முதல் எதிரி
ஜெனீவாவைக் காட்டி தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம் :
ஜெனீவாவில் பெரும் அதிசயங்கள் நடந்துவிடப்போவதாக தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களை அரசியல் சோர்வு நிலைக்கு தள்ளிவிட வேண்டாமென ஊடகங்களிற்கு கோரிக்கை விடுத்துள்ளார் சட்டத்துறை விரிவுரையாளரும் சிவில் சமூக பிரமுகருமான குமாரவடிவேல் குருபரன்.
யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்று சமர்பிக்கப்பட்ட நகல் தீர்மானத்தில் (draft resolution) சர்வதேச விசாரணை கோரப் படவில்லை, சர்வதேச போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஏதும் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை. அவை தொடர்பில் தன்னை தானே மீண்டும் விசாரித்துக்கொள்ள மூன்றாவது தடைவையாகவும் இலங்கை அரசை கேட்டுக்கொள்வதாக உள்ளது. இதனில் சர்வதேச விசாரணை என்பது பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கவேயில்லை.
இத்தகைய சூழலில் தமிழ் தேசிய அச்சு ஊடகங்கள் சில தொடர்ந்தும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடக்கப்போகின்றது என பல புனைவுகளை மக்களிடம் எடுத்து செல்கின்றன. இதனால் எமது மக்களும் இலங்கை அரசினை குற்றவாளிக்கூண்டில் ஏற்றி விசாரணைகள் நடத்தப்படுமென்ற நினைப்பிலுள்ளனர். ஆனால் அவ்வாறு சர்வதேச விசாரணைகள் ஏதும் நடத்தப்படுவது தொடர்பான தீர்மானங்கள் பற்றி ஏதுமே பேசப்படாத நிலையில் மக்களை உசுப்பேற்றி நட்டாற்றில் விடுவதன் மூலம் அவர்களை மோசமான அரசியல் சோர்வு நிலைக்கு தள்ளிவிட வேண்டாமெனவே ஊடகங்களிற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே வேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும்; உண்மை யதார்த்தம் தெரிந்தும் மக்களிடம் தவறான தகவல்களை கொண்டு சேர்ப்பதாக தெரிவித்த அவர் ஏற்கனவே பெப்ரவரி 11ம் திகதி நடைபெற்ற ஜெனீவா உயர்மட்ட சந்திப்பில் இம்முறையும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை இல்லையென்பது தெளிவாக சொல்லப்பட்டிருந்ததாக உள்வீட்டு தகவல்களை மேற்கோள் காட்டி அவர் கருத்து வெளியிட்டார்.
இதனிடையே தமது தமிழ் சிவில் சமூக அமையம் மனித உரிமை சபையின் 19 ஆவது மற்றும் 22 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டும் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவித்த குருபரன் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேரடியான மற்றும் கேட்டறிந்த அனுபவங்கள் எமக்குள்ளது. எமது சொந்த அனுபவங்களையும் நாம் கண்டறிந்த விடயங்களையும் நாங்கள் ஐ.நா நிபுணர்கள் குழு,ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், நன்கு அறியப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புகளிடம் பரிந்துரைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் புதிய அரசியல் வழி முறைக்கு ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், மக்கள் சார்ந்த அரசியல் வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் இனியொரு போன்ற இணையங்கள் உட்பட பல அரசியல் சக்திகள் கோரிக்கை விடுத்தன. அடிப்படை அரசியல் திட்டவாக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றை நிராகரித்து 30 வருட கால பிற்போக்கு அரசியல் முன்னெடுத்தவர்கள் அழிவுகளை ஏற்படித்திவருகின்றனர். ஒவ்வொரு முறை அழிப்பிற்குத் துணைசென்ற பின்னரும் அதற்கான சுயவிமர்சனத்தைக்கூட நேர்மையாக முன்வைக்காமல் அதே அரசியலைப் புதிய காரணங்களோடு முன்னெடுக்கின்றனர்.
நடைமுறைப்படுத்தாத அரசு இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகளை நடத்துமாறு அரசிடம் பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தபோதும் கடந்த 5 வருடங்கள் உள்நாட்டுக்கட்டமைப்பின் ஊடாக உண்மை மற்றும் நீதியான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை. வரையறுக்கப்பட்ட பரிந்துரைகளைச்செய்துள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் நடை முறைப்படுத்தப்படவில்லையென்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனி தமிழர் நாடு ,தனி தமிழ் ஈழம் மட்டுமே உலக தமிழர் நலனை காக்கும்!
தமிழ் இனமே ,தமிழ் இனமே ,வென்றெடுக்கும் காலமிது , ஒன்றுபட்டு போராடுவோம் ,நீதி கிடைக்கும் வரை நிமிர்ந்து நின்று போராடுவோம் ,நீதி கிடைக்கும் வரை ,நீதிக்கு தான் தலைகுனிவு ,நமக்கல்ல தலை குனிவு ,கலங்களும் ,காலங்களும் மட்டுமே மாறும் ,ஈழத்தின் விடுதலை என்ற தாரக மந்திரம் விடுதலை கிடைக்கும் வரை மாறாது ,மாற்றி எழுத உலகில் எவருக்கும் தகுதியில்லை, நீதி கிடைக்கும் வரை ,நீதியை நோக்கி நாம் ,வெற்றி நமதே ,[ மலரட்டும் தமிழ் ஈழம் ].