7 பேரையும் ஜெயலலிதா விடுதலை செய்வார்!- ராம் ஜெத்மலானி

raam-jetmalani.gif7 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. அவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 7 பேரையும் விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று பிரபல வக்கீல் ராம் ஜெத்மலானி தெரிவித்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக பிரபல வக்கீல் ராம்ஜெத் மலானி சுப்ரீம் கோர்ட்டில் வாதாடினார். இதன் காரணமாக 3 பேரும் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பினார்கள். அவர்களது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து ராம் ஜெத்மலானிக்கு தமிழர் அமைப்புகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தன.

ம.தி.மு.க. வழக்கறிஞர் பேரவையில் ராம்ஜெத்மலானிக்கு இன்று காலை சென்னை அண்ணாநகர் விஜயஸ்ரீ மகாலில் பாராட்டு விழா நடந்தது.

விழாவுக்கு வந்த ராம் ஜெத்மலானிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொன்னாடை அணிவித்து, பாராட்டி பேசினார் வைகோ.

விழாவில் ராம் ஜெத்மலானி பேசும் போது,

7 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. அவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 7 பேரையும் விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று பேசினார்.

TAGS: