இந்தியாவில் மது, வரதட்சணை காரணமாக பெண்கள் மீதான வன்முறை உயர்வு

india-women-jan-2013_0புதுடெல்லி: இந்தியாவில் மது, வரதட்சணை காரணமாக பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ஐநா பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.

ஐ.நா. சபை பெண்கள் அமைப்பு, இந்தியாவின் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்தது. இது குறித்து அந்த அமைப்பின் பிரதிநிதியான ரெபக்கா ரிச்மென் தாவாரெஸ் கூறியதாவது: இந்தியாவில் பெண் மக்கள் பிரதிநிதிகளின் மனநிலை என்ற தலைப்பில் ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு விஷயங்கள் தெரியவந்தன.

இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை தற்போது அதிகரித்துள்ளது, இது தீராத பிரச்னையாகவே நீடிக்கிறது. பெண் சிசுக்கொலை போலவே குழந்தை திருமணங்களும் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன.

கடுமையான சட்டத்தால் பெண் சிசுக் களை கருவிலேயே கலைப்பது குறைந்துள்ளது. இதைத் தவிர சமூகத்தில் ஆண், பெண் இடையே சமநிலை இல்லை. இந்திய சமூக அமைப் பில் ஆணைவிட பெண்ணுக்கு தாழ்ந்த நிலையே உள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்கள் பின்தங்கி உள்ளனர். பொருளாதார ரீதியாக பெண்கள் மற்றவர்களையே சார்ந்து வாழவேண்டிய நிர்பந்தம் உள்ளது.

சிறப்பான கல்வியில்லாத காரணத்தால் அடிப்படை தேவைகளுக்குக்கூட பெண்களால் சம்பாதிக்க முடிவதில்லை. இது பெண்கள் மீதான பொருளாதார வன்முறையாகும். வரதட்சணைக் கொடுமை இன்னமும் நீடிக்கிறது. இதனாலும், குடிப்பழக்கத்துக்கு ஆளான குடும்பத் தலைவர்களாலும் பெண்கள் மீதான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது.

கிராமப் புறங்களில் வாழும் பெண்களின் நிலை, மேலும் மிக மோசமாக உள்ளது. இவர்கள் வீட்டுவேலை, விவசாய வேலை, அன்றாட தேவைகளுக்கு உழைத்தல் ஆகியவற்றில் ஆணோடு பங்கெடுக்க வேண்டியுள்ளது. மேலும், கிராமத்து பெண்கள் வெளியிடங்களுக்கு வரும் வாய்ப்புகளே இல்லாமல் வாழ்கிறார்கள். அவர்களின் சுகாதார நிலை கொடுமையாக உள்ளது.

சில இடங்களில் மட்டுமே எய்ட்ஸ் போன்ற கொடிய நோய் குறித்த விழப்புணர்வு உள்ளது. இதுபோன்ற பாதிப்பில் சிக்கிய பெண்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் நிலை பல இடங்களில் உள்ளது.

தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாததால் பெரும்பாலான பெண்கள் மகப்பேறில் பிரச்னைகளை சந்திக்கின்றனர். வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், நோயாளிகள் மற்றும் தனியாக வாழும் பெண்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இவர்கள் வறுமையில் உழல்கின்றனர்.இதுபோன்ற பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கும் திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை.

ஆதரவற்றவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தனிப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவில் அரசியலில் 10 சதவீதப் பெண்கள் மட்டும் ஈடுபட்டுள் ளனர். இந்த நிலை மாறி சட்டமியற்றும் இடங்களில் பெண்கள் வரவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

TAGS: