பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிமுக, திமுக நேரடியாக மோதுகின்றன.
இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முதல் முறையாக 1952ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பொது தேர்தல் நடத்தப்பட்டது.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய கட்சியாக விளங்கிய காங்கிரஸ் தலைமையில்தான் அப்போது ஆட்சிகள் அமைந்தன.
தமிழகத்தில் 1967ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியிருந்தது. அந்த கட்சியின் தலைமையில் தான் தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. ஆனால், 1967ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக. 25 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரசை வீழ்த்தியது.
தற்போது, 45 ஆண்டுகள் ஆன நிலையிலும், காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் எழுந்திருக்க முடியவில்லை.
தமிழகத்தில், திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிதான் அதன் பிறகு பாராளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிடுகிறது.
அதே நேரத்தில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் (சிதம்பரம், திருவள்ளூர்), புதிய தமிழகம் கட்சி (தென்காசி), மனிதநேய மக்கள் கட்சி (மயிலாடுதுறை), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (வேலூர்) ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட மீதமுள்ள 35 தொகுதிகளிலும் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.
மொத்தமாக பார்க்கும்போது, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில், புதுச்சேரி உள்பட 35 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகிறது.
பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் அதிமுக – திமுக அதிகப்படியான தொகுதிகளில் மோதுவது இதுவே முதல்முறையாகும்.
யார்வந்தாலும் அவதிபடபோவது மக்கள்தான் !!
சரியானப் போட்டி! ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். மந்திரம் தவிர வேறு சாதனை எதுவும் இல்லை! கருணாநிதி தனது குடும்பத்தினர் சாதனைத் தவிர வேறு எதுவும் இல்லை! தமிழனுக்குக் கிடைக்கப் போவது சோதனையிலும் சோதனை!
மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாதபோது அரசியல்வாதிகளைக் குறை சொல்லி என்ன பயன்? எந்த மனிதன் தன்னைத் தவறான மனிதன் என்று ஒப்புக்கொள்வான்? மக்கள் தங்களின் அறியாமையை மறைக்க மற்றவர்களைக் குற்றப்படுத்துவதைப்போல் அரசியல்வாதிகளையும் குற்றம் சொல்லி தாங்கள் செய்த தவறுகளை மறைக்கும் ; கையாளாதனத்தை மறைக்கும் மனநோயாளியாக வாழும்போது சகல ராஜதந்திரமும் அறிந்த அரசியல்வாதி முட்டாளாக இருக்கவேண்டும் என்பது என்ன எதிர்பார்ப்பு? ஒரு கட்சியை வளர்ப்பதும், அந்தக் கட்சியின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வதும், தொண்டர்களைத் தன் கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்துக்கொண்டு சமுகத்தொண்டில் ஈடுபடுத்தி கட்டிக் காப்பதும், அதேவேளையில் எதிரணிக்கு சவாலாக நாட்டை வழிநடத்துவதும், அதை கொண்டு மக்களைத் திருப்த்திப்படுத்துவதும் எளிதான காரியமாமோ? அகவே நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்கவேண்டுமானால் அரசியல்வாதிகளைவிட மக்களே அதிவிழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். தங்களின் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு அரசியல் தலைமையைக் குற்றம் சொல்வது அறிவுடைமையா? அறியாமையா?