தேவயாணி கோப்ரகடே மீது அமெரிக்காவில் புதிய வழக்குப் பதிவு

devayani_003வீட்டுப் பணியாளரை அமெரிக்கா வரவழைத்ததில், விசா முறைகேடு செய்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசு, நீதிமன்றத்தில் மீண்டும் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது.

புதிய வழக்கின் அடிப்படையில், அந்நாட்டு நீதிமன்றம் தேவயானி கோப்ரகடேவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே மீதான விசா முறைகேட்டு வழக்கை, அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை அடுத்து, அமெரிக்க அரசு வழக்குரைஞர் மீண்டும் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது.

மன்ஹட்டன் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ள இந்த வழக்கில், தெரிந்தே பல தவறுகளை தேவயானி செய்திருப்பதாகவும், விசா பெறுவதற்காக, அமெரிக்க அதிகாரிகளிடம் தவறான தகவல்களை தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், தற்போது ஐ.நாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள தேவயானி கோப்ரகடேவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

TAGS: