மோடியால் பிரதமராக முடியாது: ராகுல்

rahul-gandhiபுதுடில்லி: தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் நகைச்சுவையானவை என கூறியுள்ள ராகுல், பா.ஜ., மற்றும் மோடியால் அதிகாரத்துக்கு வர முடியாது என கூறியுள்ளார்.

லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பா.ஜ., சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் துணைத்தலைவர் ராகுல் முன்னிறுத்தப்பட்டுள்ளார். அவரும் பல இடங்களில் சென்று தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். இதனிடையே தற்போது வரை வெளியான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரியவந்துள்ளது. மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இணையதளம் மூலம் கட்சி தொண்டர்களுடன் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது: பா.ஜ.,வில் உட்கட்சி மோதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு இடையே மோதல் உள்ளது. காங்கிரசுக்கு 100 சீட்கள் தான் கிடைக்கும் என வெளியான கருத்துக்கணிப்புகள் நகைச்சுவையானவை. இவை அனைத்தும், உங்களை நம்பிக்கை இழக்கச்செய்யவே எதிர்க்கட்சிகள் செய்யும் பிரசாரம். காங்கிரஸ் கட்சிக்கு 200 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். உங்களை நம்பிக்கை இழக்க செய்ய எதிர்கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.

கடந்த 2004ம் லோக்சபா தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி படுதோல்வியடையும் என அனைத்தும் கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால் அதனையும் மீறி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதேபோல் 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போதும், தோல்வியடைவோம் என கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால் நாம் இரண்டு மடங்கு தொகுதிகளைபெற்றோம். தற்போது நாம் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். எதிர்க்கட்சிகள் எப்போதும், காங்கிரஸ் சரியாக செயல்படவில்லை என கூறுகின்றன. நாம் வலிமையான தேர்தலை எதிர்கொண்டுள்ளோம்.

காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தொண்டர்கள் யாரும் எதிர்க்கட்சிகளின் சதி செயலில் விழுந்துவிடக்கூடாது. எதிர்க்கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நபரால் தேர்வு செய்யப்பட்டவர்கள். அக்கட்சியின் மூத்த தலைவர்களே, ஒவ்வொரு வேட்பாளரும், ஒரே நபரால் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்கள் செல்லும் திசைக்கு எதிராக நாம் செல்கிறோம்.

மோடி மற்றும் பா.ஜ., அதிகாரத்துக்கு வந்தால், காங்கிரஸ் கட்சி, மதவாத சக்திகளுக்கு எதிராக போராடும். அடுத்த தேர்தலில் நாம் தான் வெல்லப்போகிறோம். எனவே, பா.ஜ., ஆட்சிக்கு வரும் என்ற கேள்விக்கோ, மோடி பிரதமராவார் என்ற கேள்விக்கோ இடமில்லை என கூறினார்.Click Here

TAGS: