இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள விருந்தாவன் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்கு இந்துக்கள் புனித யாத்திரையை மேற்கொண்டு புனித நீராடுகின்றனர்.
இந்த ஊரில் தான் இந்தியாவில் விதவைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதை கண்கூடாக காணக்கூடியதாக இருக்கின்றது.இந்தியாவை பொறுத்தவரையில் விதவைகள் என்றால் கெட்ட சகுணம், சூன்யம் செய்பவர்கள் என்று பார்க்கப்படுகிறது.
விருந்தாவனில் கிட்டதட்ட 15000 பேர் இருக்கின்றனர், கடவுள் கிருஷ்ணர் மோட்சம் கொடுப்பார் என்று எண்ணி அவரிடம் தினமும் இவர்கள் யாசிக்கின்றனர். இவர்களுக்கு தன்னார்வ தொண்டு அமைப்புகள் உணவை கொடுக்கின்றன. அதை இவர்கள் பகிர்ந்து உண்ணுகின்றனர்.
இந்தியாவில் விதவைகளுக்கு சொத்துரிமை இருந்தும், அதை பெரும்பாலும் யாரும் கொடுப்பதில்லை, இந்த பிரச்சனையை தீர்க்க அரசு முயற்சிக்கிறது. இது தொடர்பாக அரசு இயற்ற உத்தேசிக்கும் சட்டத்திற்கு உதவி புரிந்து வரும் ஆணையத்தின் உறுப்பினரான சையதா ஹமீது கூறுகையில், விதவைகளின் உரிமைகள் சமூகத்தில் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்கிற காலக்கட்டத்தில் இப்போது இருக்கிறோம். இப்போது என்னுடைய கரங்களில் 12 வது ஐந்தாண்டு கால திட்டம் இருக்கிறது. இதனை எல்லா மாநில அரசுகளும் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்றார்.
ஆனால், இந்தியாவில் பண்டைய காலம் தொட்டு இருந்து வரும் ஜாதி மத பழக்கங்களை சட்டங்களால் மாற்றி விடலாம் என எண்ணினால் அது வெற்றியடையாது என்கிறார் வக்கீல் வந்தனா ஷா,
இதெல்லாம் விட பெரும்பாலான விதவைகள் தங்களை கொடுமைப்படுத்தியவர்களை பற்றி கூட பேச மறுப்பது தான்.
விருந்தாவனில் இருக்கும் ஏராளமான தொண்டு நிறுவனங்களில் ஒன்றை நடத்துபவர் தான் வின்னி சிங், விதவைகளின் நிலை குறித்து கருத்து தெரிவித்த அவர், கலாச்சாரத்தை தான் இதற்கு காரணமாக கூறுவார்கள். இங்கு இருப்பவர்கள், தாங்கள் செத்த பிறகு தங்களது மகன்கள் சிதைக்கு தீ மூட்டுவார்கள், அவ்வாறு அவர்கள் மூட்டினால் தாங்கள் சொர்க்கத்துக்கு போவோம் என்று நம்புகிறார்கள். எந்த மகன் காலை உடைத்தாரோ, எந்த மகன் அடித்த அடியில் மண்டை உடைந்ததோ, எந்த மகன் வாயில் மாட்டு சாணத்தை ஊற்றினாரோ, அந்த மகன் தான் சிதைக்கு தீ மூட்ட வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் இருக்கிறது. அப்போது தான் சொர்க்கத்துக்கு போவோம் என்ற நினைப்பு, முதலில் அந்த நினைப்பை மாற்ற வேண்டும் என்றார்.
முன்பு ஒரு காலத்தில் கணவன் இறந்த உடன் உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்தியாவில் இருந்து வந்தது. நல்லவேளையாக இப்போது அந்த வழக்கம் இப்போது இல்லை. அதற்கு காரணம் அது சட்டவிரோதம் என்பது அப்பட்டமாக எல்லோருக்கும் தெரிவது தான். இன்றைக்கு கணவர் இறந்த பின்னரும் மனைவி உயிரோடு இருந்தால் அவர்கள் குடும்பங்களுக்கு பாரமாக தெரிகின்றனர் போல தெரிகிறது.
தனிமையும், ஒதுக்கி வைக்கப்பட்டமையும் சேர்த்து வாட்டும் இவர்களுக்கு விருந்தாவன் போன்ற இடங்களே கடைசி போக்கு இடமாக இருக்கிறது. -BBC