இந்திய தேர்தல்: பணத்துக்கேற்ப செய்திபோடும் ஊடகங்கள்?

newspapers_indiaஇந்தியாவின் அச்சங்கங்கள் அனைத்தும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 800 தினசரிகள் வெளி வருகின்றன. ஆனால் இந்த தினசரிகள் காசு வாங்கி கொண்டு அதற்கு ஏற்றவாறு செய்தி வெளியிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்தியாவின் மாபெரும் பிரசுரிக்கும் நிறுவனம் ஒன்று, பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை சிறப்பிதழ்கள், இணைப்புகள் என்று தெளிவாக பெயரிட்டு தொகை வாங்கி கொண்டு பிரசுரித்தது.அதே நேரத்தில் சின்ன செய்தித்தாள் நிறுவனங்கள், அரசியல்வாதிகள், தொழில் நிறுவனங்களிடம் காசு வாங்கி கொண்ட செய்தி வெளியிட ஆரம்பித்தன, ஆனால் இவை அச்செய்தியை விளம்பரதாரரின் செய்தி என்று வெளியில் சொல்லவில்லை. இதன் பின்னர் தான் பணம் வாங்கி கொண்டு பிரசுரிப்பது வெளியில் தெரிய வந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் மிகப்பெரிய செய்தித்தாள் நிறுவனங்களில் ஒன்று பத்திரிக்கை விலையை மிகவும் குறைத்து போட்டியை ஆரம்பித்து வைத்தது. அதன் பின்னர், இங்கு இப்போது விற்பனையாகும் எல்லா தினசரிகளுமே அடக்க விலையை விட குறைவாகவே விற்கப்படுகின்றன. அதனை ஈடுகட்ட விளம்பரதாரர்களை பெரிதும் நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பண நெருக்கடியை தீர்ப்பதால், அவர்களை நம்பியிருக்கின்றோம் என்பதால், எந்த விதமான செய்தி விளம்பரத்தை வேண்டுமானால் கேட்கலாம் என்று அவர்கள் நம்புகின்றார்கள் என்று கூறுகிறார் மிண்ட் என்ற வர்த்தக செய்தித்தாளின் ஆசிரியராக இருக்கும் சுகுமார் ரங்கநாதன்.

அரசியல்வாதிகள் தேர்தலுக்கு செய்யும் செலவுகள் குறித்து ஆராய்ந்துள்ளனர் ஜனநாயக சீரமைப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அமைப்பின் தலைவர் தான் ஜக்தீப் சோக்கர். இந்த பணம் கொடுத்து செய்தி போடும் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருப்பதாக அவர் கூறுகிறார். அத்தோடு தேர்தல் செலவில் பெரும்பாலான பணம், காசு கொடுத்து செய்தி போடுவதற்கு செலவிடப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

ஆனால் பணம் கொடுத்து செய்தி போடுவதை நிறுத்துவது கடினமாக காரியமாக இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் ஆணையம், காசு கொடுத்து அரசியல்வாதி ஒருவர் செய்தி வெளியிடும் போது, அவர் தேர்தல் செலவு அளவை மீறினால் மட்டுமே, தேர்தல் ஆணையம் அவரை பற்றி குற்றம் காண முடியும், அவர் மக்களுக்கு தவறான தகவல் தருகிறார் என்ற அடிப்படையில் எல்லாம் வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் குற்றம் காண முடியாது. பணம் கொடுத்து செய்தி போடுவதற்கு தடை விதிக்கும் சட்டமும் இந்தியாவில் இல்லை. காசு கொடுத்து தான் செய்தி போட்டுள்ளார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பது என்பது முடியாத காரியம் என்று கூறுகிறார் தலைமை தேர்தல் ஆணையர் பிரம்மா.

ஊடக தராதரங்களை கண்காணிக்க இருக்கும் அமைப்புகளான பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா போன்றவை கூட இயலாமையை கூறுகின்றன.

இந்திய தேர்தலில் எண்பது கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர். தங்களுக்கு கிடைக்கும் செய்திகளை பொறுத்து தான் அவர்கள் முடிவெடுக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது, காசு கொடுத்து செய்தி வெளியிடும் விவகாரம் தொடர்பான கவலையும் அதிகரித்து வருகிறது.

உலகத்தின் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் குடிமக்கள், தாங்கள் படிக்கும் எதையாவது நம்ப முடியுமா என்ற கவலையும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. -BBC

TAGS: