‘ஆர்.எஸ்.எஸ்., கொடியது ‘- ராகுல்

rrahulதர்மசாலா: இமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்., துணை தலைவர் ராகுல் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கொடியது என்று சர்தார் பட்டேல் கூறியுள்ளார். ஆனால், பா.ஜ.,வினர் அதை அறியாமல் உள்ளனர். பா.ஜ.,வினருக்கு வரலாறு தெரிவதில்லை என்றும் கூறினார்.

 

மேலுர் அவர் பேசியதாவது; இமாச்சல பிரதேசம் அழகானது. இந்த மாநிலத்தின் நலனுக்கு முதல்வர் வீரபத்திரசிங் பெரும் தொண்டாற்றியுள்ளார். காங்கிரஸ் அரசு இந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்துள்ளது. எனது தந்தை ராஜிவ் காலத்தில் தான் கம்ப்யூட்டர் கொண்டு வரப்பட்டது. மக்கள் அனைவருக்கும் மொபைல் போன் கொடுத்துள்ளோம்.கம்ப்யூட்டர், மொபைல் என கொண்டு வந்து காங்கிரஸ் புரட்சி படைத்துள்ளது.

 

நாடு முழுவதும் தொழிக பாதைகள் அமைத்துள்ளோம். 15 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். ஆனால் எதிர்கட்சிகள் தாங்கள் கொண்டு வந்ததாக சிலவற்றை பறை சாட்டிக்கொள்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை கொண்டு வர விடாமல் பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் தடுத்தன. தகவல் அறியும் உரிமை சட்டம் போன்ற வரலாற்று சட்டங்கள் காங்கிரஸ் கொண்டு வந்தது. நான் மக்கள் கையில் அதிகாரம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

 

ஆர்.எஸ்.எஸ்., சிந்தனை இந்த நாட்டை அழித்து விடும். பா.ஜ.,வுக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் குறித்த வரலாறு தெரியாது. தனது சுய லாபத்திற்காக இவரது பெயரை பயன்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் நச்சுத்தன்மை கொண்டது, இது நாட்டை அழிக்கும் என்று சர்தார் பட்டேல் கூறியிருக்கிறார். ஆனால் பா.ஜ., இந்த வார்த்தைகளை படிக்கவில்லை போலும். இதனால் தான் பா.ஜ.,வுக்கு வரலாறு தெரியாது என்று சொல்கிறேன். நாங்கள் ஏழை மக்களுக்காக உழைக்க விரும்புகிறோம். இதனால் நாட்டின் கட்டமைப்பை பலப்படுத்தியுள்ளோம். இவ்வாறு ராகுல் பேசினார்.

 

ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்., குறித்து பேசியமைக்கு அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்ததுடன் கோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ராகுல் ஆர்.எஸ்.எஸ்., குறித்து விமர்சித்துள்ளார் ராகுல்.

TAGS: