இந்தியா திருத்தங்கள் கோராமல் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும்?

america-india-flag-001ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் இந்த முறை முன்வைக்கப்படவுள்ள அமெரிக்காவின் தீர்மானத்திற்கு திருத்தங்களை கோராமல் இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை இதுவரையில் நிறைவேற்றாத நிலையில், இந்திய மத்திய அரசாங்கம் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த முறையும் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் இந்திய அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக அமெரிக்கா முன்வைத்திருந்த இரண்டு தீர்மானத்திற்கும் இந்தியா ஆதரவளித்திருந்த போதும், இரண்டு தடவையும் தீர்மானத்தில் திருத்தங்களை கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAGS: