ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ரோடாக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நவீன் ஜெய்ஹிந்திற்கு தனது நீல நிற வேகன்-ஆர் காரை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆம் ஆத்மி வேட்பாளர் ஜெய்ஹிந்த் செய்தியாளர்களிடம் தகவல் தருகையில்,
என்னிடம் கார் கிடையாது. என்னை பிரச்சாரம் செய்ய அழைத்தபோதுதான் கெஜ்ரிவாலுக்கு என்னிடம் கார் இல்லாதது பற்றி தெரிய வந்தது. கார் இல்லாமல் எப்படி பிரச்சாரம் செய்ய முடியும்? என்று கூறி நீங்கள் உங்களுக்காக ஒரு காரை ஏற்பாடு செய்யும் வரை எனது காரை வைத்துக் கொள்ளுங்கள் என்று உடனே அவரது காரை என்னிடம் கொடுத்துவிட்டார் என்றார்.
கெஜ்ரிவால் தனது காரை மிகவும் அதிர்ஷ்டமான காராக கருதி வந்தார். டெல்லி முதல்வரான பின்பும் கூட பெரும்பாலான நேரங்களில் அந்த காரில்தான் சென்றார். இம்மாத தொடக்கத்தில் இந்தியாவிற்கு ஜெர்மன் நாட்டு அதிபர் வந்தபோது தனது காரிலேயே சாணக்யாபுரியிலுள்ள ஜெர்மன் தூதரகம் சென்றார்.
தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக கெஜ்ரிவாலின் காரை கடந்த 3 நாட்களாக ஜெய்ஹிந்த் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.