ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்றாலும், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்தியாவின் இலங்கை கொள்கையில் மாற்றம் வரும் என்கிறார் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பி சஹாதேவன்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன் மொழியப்பட்டிருக்கும் தீர்மானம் அடுத்தவாரம் ஐநா மன்றத்தின் மனித உரிமை அவையில் கொண்டுவரப்பட இருக்கும் சூழலில், இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகள், குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாடுகள் குறித்த விவாதம் சூடுபிடிக்கத்துவங்கியிருக்கிறது.முன்பு சியாரோலியோன் விவகாரத்தில் கடைபிடிக்கப்பட்ட அதே அணுகுமுறை இலங்கையிலும் கடைபிடிக்க வேண்டுமென பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இவரது இந்த யோசனை நியாயமானதாக இருந்தாலும் இலங்கை அரசு அதை நடைமுறைப்படுத்தாது என்கிறார் டில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தெற்காசியவியல் துறை பேராசிரியர் பி சஹாதேவன். -BBC
இந்தியா இலங்கைக்கு அளவுக்கு மீறிய இடத்தை கொடுத்துவிட்டது,. இலங்கையின் நட்புக்கு பல லட்ச ஈழ மக்களை பலி கொடுத்தது.