தனி ஈழம் என்று ஒரு நாட்டை பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை: பா.ஜ.க

hதனி ஈழம் என்று ஒரு நாட்டை பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அந்த நாட்டில் அரசியல் தீர்வு தான் காண வேண்டும். ராணுவ தீர்வு, தீர்வு ஆகாது என்று கீரமங்கலத்தில் சிவகங்கை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா பேட்டியில் கூறினார்.

நிர்வாகிகளை சந்தித்தார்:
பா.ஜ.க மாநில துணை செயலாளரும், சிவகங்கை தொகுதி வேட்பாளருமான எச்.ராஜா தங்கள் கூட்டனியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டு செல்கிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட பா.ம.க நிர்வாகிகளை சந்திக்க கீரமங்கலத்தில் உள்ள பா.ம.கட்சி மாநில துணைச் செயலாளர் டாக்டர் சுப.அருள்மணி வீட்டிற்கு வந்தார். அங்கு எச்.ராஜாவுக்கு டாக்டர் அருள்மணி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் சீதாலெட்சுமி சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர்கள் செந்தில், வெள்ளைச்சாமி, அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் ராம.துரைராஜ் மற்றும் பா.ம.க நிர்வாகிகள், ம.தி.மு.க நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எனக்கு முழு ஆதரவு கொடுத்து தேர்தல் பணிகள் செய்யுங்கள் என்று வேட்பாளர் எச்.ராஜா கேட்டுக் கொண்டார். முன்னதான பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க, ம.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தனி ஈழம் எண்ணம் இல்லை :
vaikoதொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு எச். ராஜா பதில் அளித்தார். ஒரே கூட்டனியில் உள்ள வை.கோ வின் ம.தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தனி தமிழ் ஈழம் என்பதை வெங்கையா நாயுடு அது ம.தி.மு.க வின் தேர்தல் அறிக்கை பா.ஜ.க கூட்டனி அறிக்கை இல்லை என்று மறுத்துள்ளாரே?

ஆம். இதனால் கூட்டனியில் பிளவு என்று சொல்ல முடியாது. எல்லா கட்சிகளும் ஒரே கொள்கையில் இருக்க முடியாது. நாங்கள் தேசிய கட்சி எங்களுக்கு என்று கொள்கைகள் உள்ளது. மாநிலக் கட்சிகளுக்கும் தனி கொள்கைகள் உண்டு. ஒரே கொள்கையாக இருந்தால் ஒரே கட்சியாக இருந்திருக்கும்.

பா.ஜ.கட்சியை பொருத்தவரை ஒரு நாட்டை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பேச்சு வார்த்தையின் மூலம் தான் தீர்வு காண முடியும். என்பது எங்கள் நிலை.

சம தர்மம், சம உரிமை என்பது தான் எங்கள் கொள்கை. ஆனால் 2004 வரை பேச்சுவார்ததைகள் தான் நடந்து வந்தது. அதன் பிறகு சோனியா காந்தி தலைமையில் வந்த ஆட்சி தான் ராணுவத்தை அனுப்பியது. இலங்கை ராணுவத்துடன் இந்திய ராணுவமும் அனுப்பப்பட்டது. அதனால் தான் கோத்தபய ராஜபக்சே இது இந்திய போர் என்று சொன்னார்.

2002 ல் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் போது அங்கு நடந்த போரை நிறுத்த அமைச்சர் அனுப்பப்பட்டு 48 மணி நேரத்தில் நிறுத்திவிட்டு திரும்பினார்.

அப்படிப்பட்ட ராஜபக்சேவை பா.ஜ.க சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது என்ற விமர்சனம் உள்ளதே?

ஒரு நாடு அனுமதி கொடுத்து அழைக்கும் போது அவரை வரவேற்பதில் என்ன தவறு இருக்கிறது.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அ.தி.மு.க பா.ஜ.கவுடன் கூட்டனி அமைக்கும் என்று பேசப்படுகிறதே..?

பா.ஜ.க வுக்கு 280 முதல் 300 வரை இடங்கள் கிடைக்கும். ஆனால் பத்திரிக்கைகள் தான் ஏதோ எழுதுகிறது. அதற்கு பதில் சொல்ல முடியாது.

TAGS: