இந்திய சுற்றுலா தலங்களுக்கு குறி : இந்தியன் முஜாகிதீன் திட்டம் முறியடிப்பு

terroristஇந்தியாவில் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மகால் உட்பட சுற்றுலாத் தலங்களை குறி வைத்து தாக்குதல் நடத்த இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவனான தெஷின் அக்தர் என்ற மோனுவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்தியாவில் சுற்றுலா தலங்களை தகர்க்க அவன் சதி திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்துள்ளது.

அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரும் தாஜ்மஹால், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புஷ்கார், ஜோத்பூர், பரத்பூர், கோபால் கார் ஆகிய இடங்களை தகர்க்க இவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

இதற்காக மோனு தனது கூட்டாளிகளுடன் சென்று இந்த இடங்களை பார்வையிட்டு நோட்டமிட்டு வந்துள்ளான். அனைத்து இடங்களிலும், ஒரே நேரத்தில் குண்டு வைத்து வெடிக்கச் செய்யவும், பின்னர் தில்லியில் ஆக்ராவை தகர்க்கவும் திட்டமிட்டு இருந்ததாக மோனு விசாரணையில் தெரிவித்துள்ளான். ஆனால், தீவிரவாதிகளும், அந்த கூட்டத்தின் தலைவனும் தற்போது கைது செய்யப்பட்டதன் மூலம் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்களில் குண்டு வெடிப்புகள் நடத்துவதன் நோக்கமே இந்தியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதை தடுத்து, அன்னிய செலாவணி கிடைப்பதை தடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: