2 வயது குழந்தையை நரபலி கொடுத்த 7 பேருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 23ம் திகதி பிலாய் நகரில் வசிக்கும் ஈஸ்வரி யாதவ்- கிரண் தம்பதியர் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து பக்கத்து வீட்டு 2வயது குழந்தை சிராக்கை நரபலி கொடுத்துள்ளனர்.
இந்த வழக்கில் 12 பேர் மீது பொலிசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர், இவர்களில் நால்வர் மைனர் சிறுவர்கள்.
மைனர் சிறுவர்கள் மீதான வழக்கு சிறுவர்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் மற்ற நபர்களின் விசாரணை முடிவில், நரபலி செயலை கொடுங்குற்றம் என்று வர்ணித்த செசன்ஸ் நீதிபதி கவுதம் சவுதார்யா இந்த 7 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்துள்ளார்.
உயிர்பலி கேட்கும் இந்திய மதங்களும் உயிர்பலி கொடுக்கும் சடங்குகளும்
சட்டப்படி ஒழிக்கப்படவேண்டும் .
இந்த 7 பேரையும் அதே இடத்தில நரபலி கொடுக்க நீதிமன்றம் உத்தரவு போட்டிருந்தால் மக்கள் மிகவும் சந்தோசம் அடைந்து இருப்பார்கள் ,நானும் அதில் ஒருவன் .