இந்திய மீனவர்களுக்கு இனிப்பு வழங்கிய இலங்கை கடற்படையினர்!

Sri Lankan Navy boats are displayed during a rehearsal for the Independence Day celebration in Colomboஇந்திய மீனவர்களுக்கு கச்சதீவுக்கு அருகில் மீன்பிடிக்க அனுமதித்த இலங்கை கடற்படையினர், இந்தியா மீனவர்களுக்கு குளிர்பானங்களையும் இனிப்புகளை வழங்கியுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் இன்று மேற்கொண்ட இந்த நடவடிக்கை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இராமநாதபுரம், ஜெகதாப்பட்டினம் உட்பட பல பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்றிருந்த நூற்றுக்கணக்கான மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் சிறந்த முறையில் அனுசரிப்பை வழங்கியதாக தமிழக மீனவர் சங்கத்தின் தலைவர் எம்ரீட் கூறியுள்ளார்.

1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபடும் போது இலங்கை கடற்படையினர் தம் மீது தாக்குதல் நடத்துவதாக மீனவர்கள் கடந்த காலங்களில் முறைப்பாடுகளை செய்து வந்தனர்.

அத்துடன் இந்தியா மீனவர்கள் தமது கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடுவதாக இலங்கை குற்றம் சுமத்தி வந்தது.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்த இந்தியா, தீர்மானம் தொடர்பாக வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது வெளிநடப்புச் செய்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை அடுத்து மறுதினம் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 98 இந்திய மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க இந்திய மீனவர்களை அனுமதித்துள்ள கடற்படையினர் அவர்களுக்கு இனிப்பு வழங்கியுள்ளனர்.

TAGS: