மகாராஷ்டிர மாநிலம் ஜால்னாவில் பேசிய தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு மன நல சிகிச்சை அவசியம் என்று கூறியுள்ளார்.
மத்திய வேளாண் துறை அமைச்சர், காங்கிரஸ் பேரணியில் பேசிய போது, தேவையில்லாத விஷயங்களை மோடி பேசி வருவதாகவும், நிச்சயம் அவருக்கு மன நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தர காங்கிரஸ் தலைவர்கள் பலரின் தியாகங்கள் பற்றி எல்லாம் மோடிக்கு எதுவும் தெரியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.