இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் பழமை வாய்ந்ததாக இருப்பதாக இந்தியாவை தளமாக கொண்ட த பிஸ்னஸ் ஸ்டான்டர்ட் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை விடயத்தில் இந்தியா செயற்பட்ட விதம் இதனை எடுத்துக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த கால கட்டம் வேறு.
இப்போது உலகம் பல்வேறு வழிகளில் மாற்றம் கண்டுள்ளது.
ஆனால் அந்த கறுப்பு வெள்ளை காலத்தில் வகுக்கப்பட்ட அதே வெளியுறவுக் கொள்கையுடனேயே இந்தியா பயணிக்கிறது.
இதனாலேயே இலங்கையை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாது போய் இருக்கிறது என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிதாக பதவியேற்கும் அரசாங்கமேனும், இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள அதேநேரம், அது சுலபமில்லை என்றும் தெரிவி;க்கப்பட்டுள்ளது.
பூனைக்கு புலி நடுங்குகிறது ….!