உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் போட்டியிடும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை தோற்கடிப்பதுதான் எனது லட்சியம் என்று ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
டெல்லியின் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கேஜரிவால் பேசுகையில்,
“வாராணசியில் மோடியை தோற்கடிப்பதற்காக நான் அங்கு போட்டியிடுகிறேன். அதேபோல் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடிக்க குமார் விஷ்வாஸ் போட்டியிடுகிறார்.
நாங்கள் இருவரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாதுகாப்பான தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிடவில்லை. மோடியை தோற்கடிப்பதுதான் எனது லட்சியம்’ என்று கூறினார்.