மும்பை பெண் நிருபர் பலாத்கார வழக்கு: 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

  • மும்பை பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வெள்ளிக்கிழமை மரண தண்டனை வழங்கப்பட்ட 3 பேர். (கோப்புப் படம்)
  • மும்பை பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வெள்ளிக்கிழமை மரண தண்டனை வழங்கப்பட்ட 3 பேர். (கோப்புப் படம்)

 

மும்பை பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விஜய் ஜாதவ், முகமது சலீம் அன்சாரி, காஸிம் பெங்காலி ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

தில்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்துக்கு பிறகு இந்திய தண்டனைச் சட்டத்தில், பெண்களுக்கு எதிராக தொடர் குற்றம் (ஒரே குற்றத்தில் மீண்டும் மீண்டும் ஈடுபடுதல்) என்ற பிரிவு கூடுதலாக சேர்க்கப்பட்டது. அந்தப் பிரிவின்படி, முதன் முறையாக இந்த வழக்கில் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை வழங்கிய மும்பை முதன்மை செஷன்ஸ் நீதிபதி ஷாலினி பன்சல்கர், “பெண்களுக்கு எதிராக தொடர் குற்றம் புரிந்த இந்த மூவரும் திருந்துவதற்கு வாய்ப்பில்லை’ என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி: மத்திய மும்பையின் ஒதுக்குப்புறப் பகுதியில் உள்ள சக்தி ஆலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெலிபோன் ஆபரேட்டர் பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் விஜய் ஜாதவ், முகமது சலீம் அன்சாரி, காஸிம் பெங்காலி ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

அதே இடத்தில் நடைபெற்ற பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்கார வழக்கிலும் அந்த மூவரையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து அவர்கள் மீது பெண்களுக்கு எதிராக தொடர் குற்றம் புரிந்தவர்கள் என்ற பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டிருந்தார்.

TAGS: