சூர்யா நடிக்கும் அஞ்சான் திரைப்படத்திற்கு கவிஞர் அறிவுமதி பாடல் எழுத மறுத்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், இலங்கை தமிழர்களை கொச்சைபடுத்தி படம் தயாரித்த லிங்குசாமியின் படத்திற்கு பணிபுரிய விரும்பவில்லை என்றும், மேலும் இனம் திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் சிவன், அஞ்சான் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிவதால் அவர் பணிபுரியும் படத்திற்கு தான் பாடல் எழுத முடியாது என்றும் தெரிவித்தாராம்.
அறிவுமதியும், லிங்குசாமியும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், லிங்குசாமியின் பல படங்களுக்கு அவர் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவருக்கு பதிலாக அந்த பாடலை பா.விஜய் எழுத இருப்பதாக கூறப்படுகிறது.
வாழ்த்துகள் அறிவுமதி! உங்களைப் போல சிலர் இருப்பது, அதுவும் சினிமா உலகில் இருப்பது, ஆறுதலாக இருக்கிறது!
ஒரு முறை கவிஞர் வாலி சொன்னது ….. ” சினிமாவை பொறுத்தவரை விட்டெரியும் எலும்புக்கு வாலாட்டும் நாய், தமிழை பொறுத்தவரை தொட்டெழுதும் பாட்டுக்கு பாலுட்டும் தாய் “…
தம்பி சூரியாவும் , பணத்துக்கும் புகழுக்கும் அடிமையாகாமல் லிங்கு சாமியின் படத்தில் நடிக்காமல் இருப்பது நல்லது ! சூரியா நமது தமிழ் பையன் அல்லவா ! பா.விஜய் தமிழன்தானா என்று கண்டுபிடிக்கவேண்டும் !
அது வாலி சொன்னது ,,தோம்பு ஏன்னா சொல்ல வருது ?
தன்மான தமிழனடா நீ ..
இப்படி ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கணும் …
வந்தேறிகளுக்கு தமிழ்நாடு இனிமேல் கசக்கும் …
தமிழன்கிட்டையே தமிழவச்சு காசுபார்ப்பது மட்டிமில்லாமல் அவன் மொழியாலே அவன் அசிங்கபடுதிறது …. நல்ல பிறப்பில பிறந்த எந்த தமிழனும் இவனுங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்ககூடாது …