மணப்பெண் கொடுங்கள் வாக்களிப்போம்!: ஹரியாணா இளைஞர்கள் கோரிக்கை

wedding_001எங்களது வாக்குக்கு பிரதிபலனாக எங்களுக்கு மணப்பெண் கொடுங்கள்’ என்று வித்தியாசமாக ஹரியாணா இளைஞர்கள் வேட்பாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஹரியாணா மாநிலத்தில் இன்றளவும் பெண் சிசுக் கொலை சர்வ சாதாரணமாக நடந்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் குற்றம்சாட்டுகின்றன. அதனால், அந்த மாநிலத்தில் பாலின விகிதாசாரத்தில் 1,000 ஆண்களுக்கு, 879 பெண்கள் என்ற நிலைமை நீடிக்கிறது.

இதன் காரணமாக, ஹரியாணா இளைஞர்களுக்கு மணப்பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னையைக் களையும் வகையில், கடந்த பெப்ரவரி மாதம் பீபிபூர் பஞ்சாயத்துத் தலைவர் சுனில் ஜக்லான் தலைமையில் திருமணம் ஆகாதவர்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் தற்போது இந்த கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து, பிடிஐ செய்தியாளரிடம் ஜக்லான் கூறுகையில்,

“பெண் சிசுக் கொலை மிகவும் அபாயகரமானது. தற்போது, இப்பிரச்னையை தீர்க்காவிட்டால், எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள் யாருமே இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை” என்றார்.

இதுகுறித்து, இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் ரோதக் தொகுதி வேட்பாளர் ஷம்ஷேர் கார்கராவின் மனைவி கூறுகையில், “”இந்த விஷயத்தை சமூக விழிப்புணர்வுடன்தான் அணுக வேண்டும். இது தேர்தல் பிரச்னை அல்ல” என்றார்.

TAGS: