தமிழர் பண்பாட்டு நடுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”மான் கராத்தே என்ற படத்தில் தேவையில்லாமல் திருக்குறளை புகுத்தி நையாண்டி செய்துள்ளனர். கதாநாயகியை திருமணம் செய்ய வேண்டுமெனில் பத்து திருக்குறள் தெரிந்திருக்க வேண்டுமாம். திருக்குறள் போட்டியில் கலந்து கொள்ளும் ஒருவர் கீழ்க்கண்ட வாறு திருக்குறள் சொல்கிறார்…
அவ்வாட்டல் ஓட்டலில் ஆட்டப்படும் ”.
இப்படி யாரவது திருக்குறள் சொல்வார்களா ? இது திருக்குறளை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் அல்லவா ? இப்படியான காட்சிக்கு கண்டனம் தெரிவிக்காமல் நம் தமிழ் சமூகம் திரையரங்கில் சிரித்துக் கொண்டு வெளியே வருவது வேதனையளிக்கிறது.
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் , காமத்துப்பால் என மூன்று வகைப்படும் என்று ஒருவர் சொல்கிறார் . உடனே நாயகன் ”அப்ப அந்த அமலாப்பால் ?” என்று நையாண்டி செய்கிறார். அருகில் உள்ள பெண் ஒருவர் காமத்துப்பால் என்றால் என்ன என்று கேட்கையில் அது ஆண் பால் + பெண்பால் கூட கொஞ்சம் பாதாம் பால் . அது தான் காமத்துப்பால் என்று விடை தருகிறார் இன்னொருவர். உலகிற்கு முப்பால் கொடுத்த திருக்குறளையும் , திருவள்ளுவரையும் இத்தகைய கீழ்த்தரமான நகைச்சுவை அவமானப்படுத்துவதாக உள்ளது .
அதன் பின்பு நாயகன் திருக்குறளின் முதல் பாடலை சொல்கிறார் . “அகர முதல எழுத்தெல்லாம் ‘குமரன் சன் ஆப் மகாலட்சுமி’யே உலகு” என்று சொல்லி அடுத்த திருக்குறள் நகைச்சுவையை அள்ளி வீசுகிறார் . கதாநாயகியின் வீட்டில் எழுதி உள்ள திருக்குறளை அப்படியே பார்த்து படிக்கிறார் நாயகன். ஆனால் அவர் பிறந்ததில் இருந்து ஒரு குறளைக் கூட படித்தது இல்லையாம் . இது எப்படி ஒரு ஏமாற்று வேலை என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழ்பட இயக்குனர்களே ! உங்களுக்கு நகைச்சுவை நையாண்டி செய்வதற்கு வேறு எதுவுமே கிடைக்கவில்லையா ? தமிழர்களின் புனித நூலான திருக்குறள் தான் கிடைத்ததா ? இதுவே இஸ்லாமிய மக்களின் நூலையோ , இந்துக்களின் நூலையோ கேவலப்படுத்தி இருந்தால் அவர்கள் சும்மா விடுவார்களா ? தமிழர்கள் மட்டும் என்ன அவமானப்படுத்தினாலும் எதிர்க்க மாட்டார்கள் என்ற தைரியம் தானே உங்களுக்கு !!
இனி தமிழர்கள் நீங்கள் செய்யும் நகைச்சுவைக்கு சிரித்து விட்டு போய் விடமாட்டார்கள் . மானமுள்ள தமிழர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் . இப்படியாக தமிழர்களின் பண்பாட்டை , தனித்துவத்தை , அடையாளங்களை இழிவு செய்து படமெடுத்தால் தமிழர்கள் நாங்கள் உங்கள் படங்களை திரையரங்கில் ஓட விடமாட்டோம் என எச்சரிக்கிறோம். மான் கராத்தே படத்தில் திட்டமிட்டு திருக்குறளை அவமானப்படுத்திய இயக்குனரை தமிழர் பண்பாட்டு நடுவம் வன்மையாக கண்டிக்கிறது . இதற்கு அந்த இயக்குனர் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழர்களின் சார்பில் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
சினிமாவை ஒரு பொழுது போக்காக மட்டும் பாருங்கள். அதில் வரும் வசனங்களையும் நகைச்சுவைகளையும் அன்றாட வாழ்க்கையுடன் இணைத்தாலோ அல்லது ஒப்பிட்டாலோ வாழ்க்கை சந்தி சிரிக்கும்…!!!!!
அன்றாட வாழ்க்கையில் இணையாத சினிமா ஒரு நாளைக்கு மேல் சினிமா கொட்டகையில் ஓடாது. சினிமாவை வைத்துதானே இன்றைய இளைய சமூகம் இனம், குணம் தெரியாமல் பேதலித்து நிற்கின்றது.
பொழுபோக்கு என்ற பெயரில் எதையும் கேவலபடுத்த கூடாது .இயக்குனர் தாய் ,தயாரிப்பளார் மாணவி ,நடிகன் தங்கை என்று படம் வரைந்து பாகங்கள் குறித்து கூடவே பின்னணி இசையும் சேர்த்தால் வாவ் வசூல் அல்லும் சரியா அறிவு கொழுந்து
குறளை அவமானப்படுத்துவது இதுபோன்ற சினிமா மாத்திரமல்ல படித்தவனிலிருந்து பாமரன் வரை திருக்குறளை அவமானப்படுத்துகிறார்கள். சினிமாகாரனுக்குக் குறள் நையாண்டி நக்கலுக்கானப் பொருளாகப் படுகிறது. படித்தப் புலவனுக்குத் தனது கொள்கைகளுக்கு ஏற்ப திரித்துப் பொருள் கூறி சமூகத்தைத் திசைமாற்றி விளையாடும் விளையாட்டுப் பொருளாகிறது திருக்குறள். பொறுப்பில்லாத தமிழனக்கோ குறள் ஒரு காலத்திற்கொவ்வா பயனற்ற குப்பையெனவும் , தீண்டத்தகாத ஒன்று எனவும் எண்ணி வாழ்கையிலிருந்து தூர தள்ளிவைக்கும் அவமானப் பொருளாக இருக்கிறது. இப்படி சமூகத்திலே அவரவர் பங்கிற்கு திருக்குறளை உதாசீனப்படுத்தியும் புறக்கணித்தும் காலாகாலத்திற்கும் அவமானப்படுத்திக்கொண்டிருக்கிறோம். இதில் யார் யாரைக் குறைசொல்வது? ” நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே… வாய்ச்சொல்லில் வீரரடி . சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல்கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே.. செய்வதறியாரடி கிளியே… செய்வதறியாரடி!” என்று புலம்பத் தோன்றுகின்றது.
குறளை அவமதிப்பதோ அவமானப்படுத்துவதோ மன்னிக்கமுடியாத செயல். இதெல்லாம் நம்மவர்களின் அறியாமையும் படு முட்டாள்தனமும் தான். நம்மவர்களில் திருக்குறளை பற்றி பலருக்கு ஒன்றும் தெரியாமலே அறிவிலிகளாக இருக்கின்றனர். அதைப்பற்றி புலமைத்துவம் இல்லாமலிருந்தாலும் பரவாஇல்லை — அதைப்பற்றி தெரியாது என்று சொல்லும் நம்மவர்கள் எத்தனை பேர்?
என் நம்மவர்கள் இவ்வளவு அறிவிலிகளாக இருக்கின்றனர்? அவ்வை போன்ற எத்தனையோ தமிழ் அறிஞர்கள் இருந்தும் நம்மவர்களுக்கு அவர்களை பற்றி சிறிதாவது அறிந்து இருக்க வேண்டாமா? நம்மவர்களுக்கு சூடு சொரைனை கிடையாது. பாரதிக்கு 14 பேர் தான் இடுகாடுவரை -இதிலிருந்து நமக்கு புரியவேண்டும் எவ்வளவு கீழ்த்தரமான ஜென்மங்கள் நாம் என்று. இன்னும் எவ்வளவோ !
திராவிட பூமியில் இருந்து கிடைக்கும் சினிமா முதல் எல்லாமே விரண்டாவாதமாகவே வரும்.தாய்,தந்தை,வுரவு,ஆண்டவன் போன்ற யாவையும் விமர்ச்னம் மேல் விமா்ச்சனம் அதை ஆதரிக்கும் கூட்டம்,ஒரு தரம் ஒருவர் எழுதுகிறாா் எத்தனை விவேக் வந்தாலும் இவன்கள் திருந்தமாட்டான் யென்று.யாா்யா இந்த விவேக் ஒரு பைதியகாரன்,யாறை வேணுமானாலும் கேலி செய்பவன்.தான் பெரியவர் என்றும் மதிக்கப்படுபவர் வாடா,போடா,கொச்சை படுத்தப்படும் போது வுணா்வர்,பிறர் பட்ட அவமாணத்தை,நாராயண நாராயண.