அதிமுகவுக்கு ஆதரவளிப்பது ஏன்? சீமான் பேச்சு

seeman_03அதிமுகவுக்கு ஆதரவளிப்பது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான்.

கோவை ராஜ வீதி தேர்நிலை திடலில் “நாடாளுமன்ற தேர்தலும் நமது நிலைப்பாடும்” என்ற தலைப்பில் சீமான் பேசினார்.

அப்போது, இலங்கை நம் நட்பு நாடு என்கிறது பாஜக. இலங்கை நம் நட்பு நாடு, ராஜபக்சே நமது நண்பர் என்கிறது காங்கிரஸ்.

ஆனால், இலங்கை நம் பகை நாடு, ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி.

அவரை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

கச்சத்தீவை கொடுத்தது கொடுத்தது தான் என்று கூறுகின்றன தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரசும்.

ஆனால் அதை மீட்டால் என் இன மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் என்று உறுதியாக நினைப்பவர் ஜெயலலிதா.

இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பவர் ஜெயலலிதா.

முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டார்களே. அவர்களை போய் சீமான் ஆதரிக்கலாமா? என்று கேட்கிறார்கள்.

முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டார்கள். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சத்தியமாக அதை திருப்பி கட்டி விடுவோம், அதில் எந்த மாற்றமும் இல்லை.

மேலும், பாஜக, காங்கிரஸ், திமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை எதிர்க்கும் வல்லமை பெற்ற ஒரே கட்சி அதிமுக தான்.

எனவே அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பேசியுள்ளார்.

TAGS: