கடற்படையிடம் இருந்து மீனவர்களை நான் காப்பேன்: மோடி- தமிழத்தில் இரண்டு யாழ் மீனவர்கள் கைது

narendra_modiஇலங்கை கடற்படையினரின் தாக்குதல்களில் இருந்து தாம் தமிழக மீனவர்களை காப்பாற்றுவதாக, பாரதீயே ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி வாக்களித்துள்ளார்.

நேற்று இராமநாதம்புரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் தாக்கி வந்தனர்.

இது தொடர்பில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கத்திடம் முறையிட்டிருந்த போதும், பலவீனமான அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் தாம் குஜராத் மீனவர்களை சந்தித்து அவர்களை அலங்கார மீன்பிடியில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கியதாக மோடி தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு போதிய அறிவூட்டலை வழங்கினால் அவர்களால் அலங்கார மீன்பிடியில் நலன் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழத்தில் இரண்டு யாழ்ப்பாண மீனவர்கள் கைது

தமிழகம் – வேதாதரணயம் அருகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவற்துறையினர் அவர்களை கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதான இரண்டு பேரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள்என்று தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் மேலதிக விசாரணைக்காக ராமநாதபுரம் காவற்துறை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

TAGS: