தமிழர்களின் பிரச்சினைக்காகப் போராடத அரசியல் கட்சிகளைப் புறக்கணியுங்கள் – சீமான்

seeman_03தமிழர்களின் பிரச்சினைக்காக போராடாத அரசியல் கட்சிகளை இந்தத் தேர்தலில் புறக்கணியுங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பவானியில் அந்தியூர் பிரிவில் உள்ள பாவடி திடலில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழர்களுக்குத் துரோகம் செய்தவர்கள் எல்லாம் இன்று தமிழர்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். காங்கிரஸ், பா.ஜ.க, தே.மு.தி.க. இவர்களுக்கு நாம் எதற்காக வாக்களிக்க வேண்டும்? மக்கள் சிந்திக்க வேண்டும்.

இந்த கட்சியினர் 8 கோடி தமிழர்களின் பிரச்சினைக்காக எந்த காலத்திலாவது இறங்கி போராடியது உண்டா?

காவிரி நீர் கர்நாடகாவில் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. காவிரி ஆணையமும் உச்ச நீதி மன்றமும் ஆணையிட்ட பின்னும் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது. தீர்க்கப்படாத காவிரி சிக்கல் உழவர்களின் தற்கொலையில் வந்து நிற்கிறது. அட்டப்பாடியில் கேரள அரசும் அணை கட்ட தொடங்கி விட்டது. ஒரு சொட்டு நீருக்கு வழி ஏற்படுத்தி தராத கட்சிகள் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள்.

கூப்பிடும் தூரத்தில் நம் தொப்புள் கொடி உறவுகள் இருந்தும் 1 இலட்சத்து 75 ஆயிரம் பேர் இலங்கையில் கொல்லப்பட்ட போது காப்பாற்ற வேண்டிய காங்கிரஸ், இலங்கை அரசுக்கு நிதி உதவி, போர் கருவிகள் கொடுத்து தமிழர்களை காட்டியும் கொடுத்தது.

அதற்கு துணை நின்றது தி.மு.க, வேடிக்கை பார்த்தது. பாரதிய ஜனதாக் கட்சி, இப்படிப்பட்டவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள். வாக்குகள் மூலம் அவர்களுக்கு சவுக்கடி கொடுங்கள் என சீமான் அவர்கள் மேலும் கூறினார்.

TAGS: