தமிழக மீனவர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று தேர்தல் பிரசாரத்தின் போது ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவெற்றியூரில் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபுவுக்கு ஆதரவாக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை பிரசாரம் செய்தார்.
அப்போது, தமிழக மீனவர்களை வஞ்சித்த அரசு மத்திய காங்கிரஸ் அரசு.
ஆனால், மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
மீனவர்கள் பிரச்சினையில் சோனியா காந்தி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியளிக்கக் கூடாது என பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேபோல், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது கொடுத்தது மத்திய காங்கிரஸ் அரசே.
ஊழல் சாம்ராஜ்யம் நடத்தும் மத்திய அரசை இந்த தேர்தலில் தூக்கி எறிய வேண்டும் என்று குற்றஞ்சாட்டி பேசினார் ஜெயலலிதா.
அம்மா! தாயே! நீங்க வடிக்கிற கண்ணீரை நீ,,,,லக்….கண்ணீரென்று சொல்லலாமா!
ராமர் பாலத்தை காப்பாற்றிய முதலமைசர்க்கு நன்றிகள் பல,வாழ்க வும் புகள்,வாழ்க நாராயண நாமம்.
ஆமாம்2…., நீங்க வடிக்கறதுதான் உங்க சொந்த, உண்மைக் கண்ணீர்..! அதை வேண்டும்போது வரவைக்க நீங்க கூத்தாடியா இருந்தப்போ பாவிச்ச் சில கிளிசரின் குப்பிகளை இன்னும் பத்திரமா வச்சிருக்கிங்கே …!! ரொம்ப முன்யோசனை.