நரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றால், இலங்கை படுகொலைக்கு காரணமான ராஜபக்ச மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சாத்தூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய வைகோ, இலங்கை அதிபர் ராஜபக்சே செய்த குற்றங்களையும் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், ஓட்டுக்கு பணம் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க சில கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டுவருவதாகவும், அந்த கட்சிகளுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்றும் வைகோ தெரிவித்தார்.
மோடி பிரதமராக பதவியேற்றால் இனப்படுகொலைக்கு எதிராக ராஜபக்சே மீது கமிசன் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பார் என்று நீங்கள் ஏன் கூ றவேண்டும்?! அவர் வாயில் என்ன கல்கத்தா கொல்கட்டை வைத்து உள்ளார? தமிழர் நாடு வந்து வெட்கமில்லாமல் வோட்டு வங்கிக்காக வருங்கால பிரதமர் கூத்தடிகள் வீடுகளுக்கு சென்று அவர்களைப் பார்க்க நேரம் இருக்க; இதை ஒரு கூட்டத்தில் அவரே பகிங்கரமாக அறிவிக்க நேரமில்லையா?! தமிழர் நாட்டு மக்களை மடையர்களாக்கி ஏமாற்றுவதே அரசியல்வாதிகளின் கயமை நாடகமாய்ப் போச்சு.
காங்கரசைவிட பிஜெகே மேல் என்பது என் கணிப்பு,வைகோ தி மு க வில் இருக்கும் பொது தன் உயிரையும் துச்சமென நினைத்து தி மு க தலைமைக்கும் தெரியாமல்,கள்ளத்தோணியில் பயணித்து மாவீரன் பிரபாகரனோடு சில தினங்களை கழித்துள்ளார்,வைகோ வெற்றி பெற்றால் கவுரமான பதவிகிடைப்பதோடு,நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்களுக்காக கர்ஜிப்பார்,வைகோவிடம் பேச்சு திறமையும்,அறிஞர் அண்ணாவிடம்கற்ற ஆங்கில புலமையும்அமையப் பெற்றவர்!ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தில்லி நாடாளுமன்ற வளாக ஆர்ப்பாட்டத்தில் தன்னுடன் பிஜெகே முக்கிய தலைவர் அத்வானியை கலந்துக்கொள்ளச்செயிதவர்!எழு பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மூத்த பிரபலமான வழக்கறிஞரை வழக்காடவைத்து வழக்கில் வெற்றி பெற்றுள்ளது பாராட்டத்தக்கது!தெலுங்கு வழியானாலும் என் கண்ணோட்டத்தில் தமிழனாக பார்க்கிறேன்!
மோடியே அடுத்த பிரதமர்.. விருந்தாளியாக வந்தவளை திரும்ப இத்தாலிக்கு அனுப்ப வேண்டும்..
அலை ஓசை அவர்களே, தமிழர் நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகளைவிட ஈழம் மலர வைகோ அதிகம் பேசி உள்ளார்; உண்மை. ஆனால் நான் குறிப்பிட்ட விடயம், ஏன் அந்த முக்கிய அறிவிப்பை மோடியே செய்து இருக்க்க்க் கூடாது?? (1)அப்படியானால் மோடி ராஜபக்சே விசாரணையை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. (2)ஒருகால் மோடி PMஆக வந்தால் தானே சொல்லாதை செய்யவில்லை என அவர்மீது குற்றம் கூற இயலாது. அதற்கான பாதுகாப்பு கவசமே மோடியின் இந்த மௌனம். ஈழம் மலர பாடுபடும் வைக்கோ ஈழம் மலர்வதை ஆதரிக்கப்போவது இல்லை எனக் கூறிவிட்ட BJPயுடன் ஏன் கூட்டனி?? அரசியல் நாற்காலிக்காக இங்கு principle விதவையாகிறது. அரசியலில் principles பார்த்துக்கொண்டு இருந்தால் கதி அம்போதான் என பலர் நினைப்பது எனக்கும் புரிகிறது.