வெளிநாட்டவர்கள் சட்டத்தின் கீழ் தங்களை தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக மதுரை மேல் நீதிமன்றத்தில் இலங்கை அகதி ஒருவர் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பி.கருப்பதேவர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவர், 1974 ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி தாம் இந்தியர் என்றும், எனினும 1996ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கடும் யுத்தம் இடம்பெற்ற வேளையில் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் தமது மனுவில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து அகதியாக வரும் போது தமது இந்திய கடவுச்சீட்டை மறந்து வந்துவிட்டதாகவும், இதனால் தங்களை இலங்கை அகதி முகாம்களில் தடுத்து வைத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தங்களை விடுவிக்குமாறு தெரிவித்து அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்த போதும், இது குறித்து தீர்மானிக்கும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் வரையறைக்குள் வராது என்று மதுரை மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
அவரது மகன் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி தமிழகத்தை சேர்ந்த ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பண மோசடி செய்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.