நவீன இடைமறி ஏவுகணை: இந்தியா சாதனை

interceptor_missile_001நவீன இடைமறி ஏவுகணை பரிசோதனையை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

ஒடிஷாவின் பாலசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீலர் தீவில் நேற்று காலை 9.10 மணியளவில் வான் நோக்கி செலுத்தி சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

குறித்த ஏவுகணைக்கு பிரித்திவி எயார் டிபென்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

கடற்படை விமானத்தில் இருந்து நேற்று காலை 9.06 மணிக்கு எதிரி நாட்டு இலக்காக கருதப்படும் ஏவுகணை ஏவப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரேடார் மூலம் கிடைத்த சிக்னல்களைக் கொண்டு ஏவப்பட்ட வீலர் தீவில் இருந்து சென்ற நவீன ரக இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்ததாக இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது சோதிக்கப்பட்ட இடைமறி ஏவுகணையின் இலக்கு தூரம் 100 கிலோமீட்டருக்கு அதிகமானது என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

TAGS: