காங்கிரஸ் மீது வெறுப்படைந்த மக்கள் மோடியை விரும்புகின்றனர்: சந்திரபாபு நாயுடு

  • ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாதில் புதன்கிழமை வாக்களித்துவிட்டு வெளியே வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர்.
  • ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாதில் புதன்கிழமை வாக்களித்துவிட்டு வெளியே வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர்.

 

“காங்கிரஸ் கட்சித் தலைமையின் மீதும், அக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்களாலும் விரக்தி அடைந்துள்ள மக்கள், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர்’ என்று ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு கூறினார்.

தெலங்கானா பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தலின்போது ஹைதராபாதில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தாருடன் வாக்குச்செலுத்திய சந்திரபாபு நாயுடு பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

தெலங்கானா மற்றும் சீமாந்திரத்தில் நடைபெறும் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களில் பாஜகவும் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஊழல்கள் மலிந்துபோனதால் அக்கட்சியின் தலைமை மீது மக்களுக்கு மிகுந்த வெறுப்பு உண்டாகி விட்டது. ஊழலுக்கு எதிராக கடும் கோபத்தில் உள்ள மக்கள் ஒரு சிறந்த நிர்வாகியைத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர். இதனால் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டுமென கருதுகின்றனர். தங்களது பொறுப்பை உணர்ந்து கொண்டுள்ள தெலங்கானா மக்கள் ஆர்வத்துடன் முன்வந்து பெருவாரியாக வாக்களித்தது மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் சந்திரபாபு நாயுடு.

TAGS: