பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் : உலக வங்கி தகவல்

w bankவாஷிங்டன்: கடந்தஆறு ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் வெகுவாக முன்னேறி யுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2005-ம் ஆண்டு பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்தில் இருந்து வந்தது. மேலும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு 10 -வது இடத்தில் இருந்த இந்தியா 2011-ம் ஆண்டு 3-வது இடத்திற்குமுன்னேறியுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் சீனா,இந்தியா, இந்தோனேஷியா நாடுகளின்பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டு வந்துள்ளது.

2011-ம் ஆண்டு உலகம் முழுவதுமான பொருள்களின் மொத்த உற்பத்தியில் பாதியளவு குறைந்த வருவாய் உடைய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவை தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாது மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொருத்த வரையில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் இந்தோனேஷியா, மலேசியா 32.3 சதவீதமும், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் ,இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் 32.9 சதவீதமும் பங்குவகிக்கின்றன.

இது மட்டுமல்லாது இந்தியா,சீனா போன்ற நாடுகள் உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்கு வகிப்பதாகவும் உலக வங்கியின் புள்ளிவிவரத்தி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: