அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைக்கு பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியே காரணம் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “அஸ்ஸாம் மாநிலத்தில் மோடி தனது பிரசாரத்தின்போது, அங்கு வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் வங்கதேசத்தவர்கள் என்று தெரிவித்தார்.
அதாவது அஸ்ஸாமில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக அந்த மாநில மக்களைத் தூண்டிவிடும் வகையில் அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து தற்போது அங்கு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதான் உண்மை. இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது’ என்றார்.