டெல்லியில் நான் இருந்திருந்தால், மோடியின் இடுப்பில் கயிற்றை கட்டி சிறைக்கு அனுப்பியிருப்பேன்: மம்தா

mamataமேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, முர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது,

 பா.ஜ.,வுக்கு எதிராகவும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. மோடிக்கு பணிந்து அக்கட்சி உள்ளது. காங்கிரஸ் இடத்தில் நான் டெல்லியில் இருந்திருந்தால், மோடியின் இடுப்பில் கயிற்றை கட்சி அவரை சிறைக்கு அனுப்பியிருப்பேன்.

ஆரம்பத்தில் பா.ஜ.,வுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் ஏதும் கொடுக்கவில்லை. தற்போது, பேசுவதற்கு பயந்து போய் உள்ளது. தேர்தல் முடிவுக்கு முன்னரே, தான் பிரதமர் என மோடி நினைப்பதாகவும், குழந்தை பிறக்கும் முன்னரே, திருமண தேதியையும், யார் மணப்பெண், மாப்பிள்ளை என்பதையும் மோடி முடிவு செய்துவிட்டதை போல் செயல்படுகிறார். இதற்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொறுப்பற்ற செயலே காரணம்.

மோடி தனது உடமைகளுடன் தயாராக இருக்க வேண்டும். தேதல் முடிவுக்கு பின்னர் உங்களை மேற்கு வங்க மக்கள் உங்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்புவார்கள். மேற்கு வங்க அரசுக்கும், மாநில மக்களுக்கும் நான் பொறுப்பாக உள்ளேன். மோடி பிரதமரானாலும், மாநில அரசின் முடிவை மீறி மத்திய அரசினால் மாநிலம் தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்க முடியாது. இது சட்டம் ஒழுங்கு விவகாரம். இது மத்திய அரசின் பணியல்ல. குஜராத் முதல்வருக்கு நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி தெரியுமா? அவர் வங்காளிகள் வங்காளிகள் அல்லாதவர் என மக்களை பிரிக்க பார்க்கிறார். காங்கிரஸ் ஊழலை ஆதரிக்கிறது. பா.ஜ., கலவரத்திற்கு ஆதரவாக நிற்கிறது. இடதுசாரிகள் மேற்கு வங்கத்தை சீரழித்தவர் என கூறியுள்ளார்.

எனது ஆதரவு மம்தா பாணர்ஜிக்கு எப்போதும் உண்டு: நரந்திரமோடி பேட்டி


பா.ஜ.க, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

கடந்த 2 தேர்தல்களில் மக்களின் நம்பிக்கையை மம்தாவால் பெற முடியவில்லை. கடந்த 35 ஆண்டுகளாக இடதுசாரிகள் மேற்குவங்கத்தை சீரழித்து விட்டனர். மம்தா பாணர்ஜி தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் தனது தவறுகளை திருத்திக் கொண்டதாலேயே அவர் மாநில தேர்தலில் இந்த முறை அவரால் வெற்றி பெற முடிந்தது. எனது ஆதரவு மம்தா பாணர்ஜிக்கு எப்போதும் உண்டு என்று மோடி தெரிவித்தார்.

TAGS: