முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அணையின் மதகு பகுதியில் நீர்மட்ட அளவுகளை குறியிடும் பணியில் தமிழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தலைமையில் 4 ஊழியர்கள், அணையின் மதகு பகுதியில் நீர்மட்ட அளவுகளை குறியிடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மதகுகளுக்கு எண்ணை போடுதல் உள்ளிட்ட மராமத்து பணிகளும் நடந்து வருகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பணிகள் அனைத்தும் முடிந்து விடும் என்றும், தமிழக அரசின் உத்தரவு வந்ததும், அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்படும் என்றும் அதிகாரி கூறியுள்ளார்.
இழந்த நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!