ஹைதராபாத்தில் மதக் கலவரம்: துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

hyderabad_riots_001ஹைதராபாத்தில் இரு மதத்தினரிடையே ஏற்ப்பட்ட வன்முறையை அடுத்து, பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

ஆந்திரப் பிரதேச தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பஹதூர்புரா என்ற பகுதியில் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த கொடியை எரித்ததால் இந்தக் கலவரம் நடந்ததாக தெரிகிறது.இதனைத் தொடர்ந்து அங்கு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

விரைந்து வந்த பொலிசார் அங்கு கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.இதையடுத்து, கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்குதலை நடத்தியதால், பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் 3 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TAGS: