கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின்விசை நிலையத்தின் முதலாவது அணுஉலையில் மே 14 ஆம் தேதி பராமரிப்புப் பணியை தொடங்கியபோதுஇ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள ‘டர்பைன்’ பகுதியில் வெப்ப நீர் எடுத்துச் செல்லும் குழாய்களின் வால்வு திறக்கப்பட்டபோதுஇ இந்தப் பணியில் ஈடுபட்டு இருந்த ராஜன்இ பால்ராஜ்இ செந்தில்குமார்இ ராஜேÞஇ வினுஇ மகேஷ் ஆகிய ஆறு தொழிலாளர்கள் மீது வெப்ப நீர் கொட்டியதால்இ அவர்கள் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டுஇ நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்தது. கூடங்குளத்தில் என்ன நடக்கிறது என்பது வெளிஉலகிற்குத் தெரிவது இல்லை.
கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலைகள் ஒன்று மற்றும் இரண்டில் பயன்படுத்தப்பட்டு உள்ள உதிரிப்பாகங்கள் தரம் குறைந்தவை என்று ரஷ்ய ஊடகங்கள் வாயிலாக அம்பலம் ஆயின. ஜியோ-போடோல்Þக் (ணுஐழு-pழனழடளம) உள்ளிட்ட நிறுவனங்கள் கூடங்குளம் அணுஉலைகளுக்கு அளித்துள்ள உதிரி பாகங்கள் சோதனைக் கட்டத்திலேயே குறைபாடுகள் கொண்டவையாக இருந்தன என்ற அச்சம் எழுந்தது.
அந்நிறுவனத்தின் கொள்முதல் இயக்குநர் செர்கெய் ஷூடோவ் என்பவரை ரஷ்ய அரசு கைது செய்துஇ விசாரணை நடத்தியதை நார்வே நாட்டில் இயங்கும் சர்வதேச சுற்றுச் சூழல் தன்னார்வ அமைப்பான பெல்லோனா பவுண்டேஷன் 2012 பிப்ரவரியில் வெளிப்படுத்தியது.
ஆனால்இ இந்திய அணுசக்தித் துறை மற்றும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியம்இ அணுஉலை பாதுகாப்பு குறித்த ஐயப்பாடுகளை அலட்சியப்படுத்திவிட்டுஇ அணு மின் உற்பத்தியைத் தொடங்குவதிலேயே குறியாக இருந்தன. கூடங்குளம் அணுஉலையை இயக்குவதன் மூலம் தமிழக மக்களின் உயிரை மத்திய அரசு பணயம் வைத்து இருக்கிறது.
ஜெயலலிதா அரசு தமிழக மக்களை ஏமாற்றி நாடகம் ஆடியது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.
ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகூட புகுஷிமா அணுஉலை விபத்தைத் தடுக்க முடியவில்லை. வேறு பல நாடுகளில் விபத்து ஏற்பட்டுள்ள அணுஉலைகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அபாயங்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள்.
எனவேஇ கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலைகளை முற்றாக அகற்ற வேண்டும். மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளை அமைக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்.
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்இ
15.05.2014 மறுமலர்ச்சி தி.மு.க
Chernobyl ஒரு பாடம்! அணு உலை வெடித்தால் என்ன ஆகும் என்று ரஷ்ய வில் 1986 ஆம் ஆண்டு நடந்த விபத்து கூறும்! அவை என்ன என்ன தெரியுமா! வெறும் 100 கிலோ plutonium /uranium வெடிப்பினால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு தெரியுமா ? 130 000 மக்கள் அந்த இடத்தை விட்டு வெளி யெற்ற பட்டனர். எல்லா உடமைகளும் செல்லாது என்று அரசாங்கம் அறிவித்தது ! அவர்களை காபாற்ற சென்ற ராணுவம் (30,000 வீரர்கள்), 1.5 வருடத்திற்குள் முழுமையாக உயிர் இழந்தனர் ! அங்கிருந்த மக்கள் 80,000 பேர் உடல் நிலை பதிக்க பட்டு இறந்தார்கள். அங்கே இருந்து சென்ற மனிதர்களின் பிள்ளைகள் அல்லது அவர்களது வம்சாவளியினர்கள் 30,000 பேருக்கு மேல் உடல் உனமுற்றவர்கலாக வாழ்கிறார்கள் ! அங்கே இருந்து தப்பி சென்ற மற்ற உயிரினங்கள், எல்லா வித குறைபாடுகளுடம் காணபடுகின்றன, இன்றும் ! அந்த இடத்தில, எல்ல பூமிவாசிகளும் அழிந்து விட்டன ! மனிதனின் பேராசையால் !
ஜப்பான் ஒரு பாடத்திலும் பாடம் ! ஒரு அணு குண்டு வெடித்ததும், 40,000 மனிதர்கள் நீர் ஆவிபோல் மேலே எழும்புவார்கள் ! காரணம், 3000 டிகிரி வெப்பமும் (சூரியனுக்கு நிகரனானது), அதனை அள்ளி செல்லும் வேகம் 1000 கிலோ மீட்டர் வேகமும் (வானுர்தியின் மேலே எழும்பும் வேகம் 300 k / m ), மனிதர்களை நின்றே இடத்திலேயே நீர் ஆவிபோலே மேலே எல்லும்ப செய்யும் ! ஒரு எலும்பு கூட கீழே விழாது ! இது தேவையா ?