தமிழகத்தில் அ.தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை

admkசென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தொகுதிகள் ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணி முதல் துவங்கி நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க., தர்மபுரி, அரக்கோணம், திண்டுக்கல், மயிலாடுதுறை, பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், நாமக்கல், மத்திய சென்னை, ஈரோடு, நீலகிரி, கோவை , பொள்ளாச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி , உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், பா.ஜ., ஒரு தொகுதியிலும் ( நாகர்கோவில் )பா.ம.க., (தர்மபுரி முன்னிலை வகித்து வருகிறது.

‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரே கட்டமாக, ஏப்., 24ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இதற்கென கடந்த மார்ச் 29ம் தேதி, வேட்பு மனு தாக்கல் துவங்கியது. ஆறாவது கட்டமாக, ஏப்ரல், 24ம் தேதி, தமிழகத்தின், 39 தொகுதிகளுக்கும்; புதுச்சேரியின், ஒரு தொகுதிக்கும், தேர்தல் நடத்தப்பட்டது. லோக்சபா தேர்தலுடன், தென் சென்னை, லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், இடைத்தேர்தல் நடந்தது.

தமிழகத்தில், 5.37 கோடி வாக்காளர்கள் பட்டியலில் இருந்தனர். இவர்களில், 2.69 கோடி பேர் ஆண்கள்; 2.68 கோடி பேர் பெண்கள்; இதர பிரிவு , 2,996 பேர். ஓட்டுப்பதிவு 86 சவீதமாக இருந்தது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அ.தி.மு.க,, தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ., இடதுசாரிகள் என ஐம்முனை போட்டி நடந்தது. அ.தி.மு.,க கூட்டணியில் புரட்சிபாரதம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட சொற்ப கட்சிகளே இடம் பெற்றிருந்தன. தி.மு.க.,வில் புதிய தமிழகம், விடுதலைசிறுத்தைகள், இந்திய தேசிய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆகியன இடம் பெற்றன. பா.ஜ., கூட்டணியில் ம.தி.மு.க,. தே.மு.தி.க., பா.ம.க., இந்திய ஜனநாயககட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி ஆகியன இடம் பெற்றன.

ஆலந்தூர் இடைத்தேர்தல்: ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இத்தொகுதியில், எம்.எல்.ஏ.,வாக இருந்த, பண்ருட்டி ராமச்சந்திரன், பதவியை ராஜினாமா செய்து, தே.மு.தி.க.,வில் இருந்து விலகி, தற்போது, அ.தி.மு.க.,வில் சேர்ந்துள்ளார். அவர் ராஜினாமா செய்ததால், லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, அந்த தொகுதிக்கும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டசபைக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மைக்ரோ பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஓட்டு விவரம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். ஓட்டு மையங்களில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

TAGS: