ஆமதாபாத்: மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன் எனவும், நாட்டை முன்னெடுத்து செல்வதில் ஆர்வமாக உள்ளதாாகவும் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி கூறினார்.
பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, தேர்தலுக்கு முன்னர், குஜராத்தின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் பலூன் போன்றது என எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர். எனது கருத்திற்கு எதிர்மறையாக பிரசாரம் செய்தனர். அவர்கள் நான் எந்தவகையான மேஜிஷியன் என்பதை புரிந்து கொள்ள மறுத்தனர். ஆனால் வளர்ச்சிதொடர்பாக பிரசாரம் செய்வதை நான் கட்டாயமாக்கினேன். வளர்ச்சிக்கு ஆதரவாக மக்கள் இருப்பார்கள் என்பதை இந்த தேர்தல் உறுதி செய்துள்ளது. மக்களின் தீர்ப்பு வளர்ச்சிக்கான தீர்ப்பு.நாட்டை முன்னெடுத்து செல்வதற்கான தீர்ப்பு. மக்களின் கனவுகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும் என கூறும் தீர்ப்பு
அவசர நிலைக்கு பிறகு , மக்கள் ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். மதம் அல்லது ஜாதி ஆகியவற்றை தள்ளி வைத்துவிட்டு ஓட்டளித்துள்ளனர். என்னை கடுமையாக விமர்ச்சித்தவர்களுக்கு பதில் தரும் முடிவு. எதிர்க்கட்சியினர் கடுமையாக உழைக்காமல் என்னை விமர்சனம் செய்வதில் மட்டும் ஆராய்ச்சி செய்து தோல்வியடைந்துள்ளனர்.
சில மக்கள் விரோத சக்திகள், மக்களின் கவனத்தை திசைதிருப்ப தேவையற்ற விவகாரங்களை கையிலெடுத்து பிரசாரம் செய்தனர். இதன் மூலம் என்னை விமர்சனம் செய்தனர். இருப்பினும், இதன் மூலம் மறைமுகமாக அவர்கள் வளர்ச்சி பற்றி பேசினர். தேர்தலுக்கான திட்டத்தையும், யார் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதையும் முதல்முறையாக அதிகாரத்தில் இல்லாத மக்கள் முடிவு செய்துள்ளனர். நாங்கள் வளர்ச்சி திட்டத்தை முன்வைத்தோம். ஆனால், காங்கிரஸ் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தது.
மக்கள் பா.ஜ.,வுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இந்த உத்தரவு, மற்ற கட்சிகளுக்கு எதிரானதல்ல. தேர்தலில் வெற்றி பெறாத கட்சிகளுக்கும் எதிராகவும் உத்தரவுபிறப்பிக்கப்படவில்லை. எங்களை பொறுத்த வரையில், பல தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களைபோல், அனைவரும் சமமானவர்கள். விரோதம் மற்றும் கடுமையான வெறுப்பு காட்டுதல் முடிவுக்கு வந்தள்ளது. நாட்டை முன்னெடுத்து செல்வதில் நான் ஆர்வமாக உள்ளேன்.
இந்த தேர்தலில் மக்கள் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.வாரிசு அரசியல் இல்லாத கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. பா.ஜ.,வுக்கு மக்கள் தெளிவான உத்தரவு கொடுத்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ஆனால் பெறவில்லை.தோல்வியடைந்தவர்களை அவமானப்படுத்த வெற்றி பெறவில்லை.மக்களின் தெளிவான உத்தரவால் பொறுப்பு வந்துள்ளது. என் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன்.
சுதந்திரத்திற்கு பின்னர், வளர்ச்சி திட்டத்தை எந்த அரசும் இயக்கமாக மாற்றியதில்லை. நம்நாட்டிற்கு பின் சுதந்திரம் கிடைத்த நாடுகள் அனைத்தும், இந்தியாவை முந்தி சென்றுள்ளன. 21ம்நூற்றாண்டை, இந்தியாவின்நூற்றாண்டாக மாற்ற 10 ஆண்டுகள் தேவைப்படுகிறது என கூறினார்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
தமிழ் ஈழத்தை விரைவாகப் பெற்றுக் கொடுங்கள் ஐயா; தமிழக மீனவர்கள் பிரச்சினையையும் உடனே தீர்த்து வையுங்கள் ஐயா … இல்லையேல் அதை வைத்துக் கொண்டு ‘செல்வி’ (???)ஜெயலலிதா இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் சட்ட மன்றத் தேர்தல் வரையில் ‘டிராமா’ போட்டுக் கொண்டே இருப்பார்!!!
அகந்தையின் கை அகன்றது ,கூப்பாடு தூரம் இருந்தும் தமிழர்களின் மரண ஓலத்தின் குரல் மட்டுமே எங்களுக்கு சொந்தமானது ,காப்பாற்ற கூடிய இடத்தில் இருந்தவன் ,காந்தி வழி வந்தவன் என்று கூறி ஜனநாயகம் பேசுகிறவன் தன்னிலை மறந்தான் ,இந்திய ஜனநாயகத்தை மாற்றி வெளியுறவு கொள்கை என்று கூறி சர்வாதிகாரத்தின் உச்சம் சென்றான் , ஒரு மாநிலம் மட்டும் உள்ளவன் என்ன செய்ய முடியும் என்று ஆணுவத்தின் உச்சம் நின்றான் ,தன் இனமக்களை பலி கொடுத்து வாயடைத்து நின்றோம் ,மாற்ற நினைத்தோம் ஆட்சியாளனை ,மாற்றினோம் நாங்கள் ,மாற்றங்கள் நிகழ்ந்தது ,ஏற்றங்கள் பிறந்தது , கை அகன்று தாமரை மலர்ந்தது , மாறும் இந்திய வெளியுறவுக்கொள்கை , ஈழத்தில் வசந்தம் பிறக்கும் ,மீனவர்களின் துன்பம் அகலும் ,என்ற நம்பிக்கையில் இன்றும் நாம் . டீ கடை நாயகனின் சரித்திரத்தில் ,சாதனைகள் பல தொடரட்டும் இந்திய சரித்திரம் உலகம் பேசட்டும் , ஆளும் நமோ நாயகனுக்கு வாழ்த்துக்கள் பல ,பல .பல ,பல ,பல [ மலரட்டும் தமிழ் ஈழம் ] .
மக்களுக்கு உங்கள் மேல் முழு நம்பிக்கை உண்டு .வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .
ஐயா மோடி அவர்களே , தயவு கூர்ந்து ‘செல்வி’ (????) ஜெயலலிதாவை மட்டும் உங்களோடு இணைத்துக் கொள்ளாதீர்கள்!! முன்பு வாஜ்பாயை கவிழ்த்தது போல் உங்களையும் சந்தர்ப்பம் பார்த்து கவிழ்த்து விடுவார் ….கவனம், கவனம்….