ராஜினாமா முடிவை சில மணி நேரங்களில் திரும்ப பெற்றார் ஸ்டாலின்

stalindmkasasபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 34 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன் கூட்டணி கட்சிகளும் படுதோல்வியை தழுவின. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு தலைமை தாங்கி தமிழ்நாடு முழுவதும் விரிவான சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

தி.மு.க. வேட்பாளர் தேர்வில் அவர் தலையிட்டதாகவும், பணபலம் படைத்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்தாகவும், கூட்டணி முயற்சியில் ஈடுபடவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அதனாலேயே தி.மு.க. தோல்வியை தழுவியதாகவும் புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தி.மு.க. தோல்விக்கு பொறுப்பு ஏற்று அனைத்து பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக கூறி தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்து கடிதம் கொடுத்தார். இதை அப்போதே கருணாநிதி ஏற்க மறுத்தாக கூறப்பட்டது.

இத்தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம், வில்லிவாக்கம் பகுதி திமுக தொண்டர்கள் கலைஞர் வீட்டின் முன் குவிந்தனர். ஸ்டாலின் வீட்டின் முன்பும் ஏராளமான தொண்டர்கள் கூடி ராஜினாமாவை வாபஸ் பெறுமாறு கோஷமிட்டனர். இதன் பின் தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெறுவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

ராஜினாமா கடிதம் அளித்த ஸ்டாலினின் நடவடிக்கை அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில மணி நேரங்களிலேயே அதை வாபஸ் பெற்றவுடன் புஸ்வானம் ஆகிப்போனது.

TAGS: