நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில் இருந்து பங்கு சந்தையில் 1லட்சம் கோடி அளவிற்கு முதலீடு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அந்த கட்சி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது.
இந்த அறிவிப்பையடுத்து, இதுவரை இந்திய பங்கு சந்தையில் அந்நிய நிறுவனங்கள் ஒரு லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாக, செபி தெரிவித்துள்ளது.
மேலும், இந்த அளவிற்கு பங்கு சந்தையில் அந்நிய முதலீடு குவிய காரணம் மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நிலையாக அமையும் என்ற எதிர்பார்ப்புதான் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்குள்ள கறுப்புப் பணத்தை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று அதை வெள்ளையாக்கி மீண்டும் இந்தியாவிற்குள் முதலீடு என்று கொண்டுவருவது இந்திய பணக்காரர்களை மேலும் பணம் குவிக்க வைக்கும் யுக்தியே தவிர பாமர ஏழைகளுக்கு பால் வார்க்கும் என்று எண்ணி ஏமாற வேண்டாம்.